அடுத்த கட்டத்தை எட்டும் பெகாசஸ் விசாரணை! – உச்சநீதிமன்றம் அதிரடி..!


பெகாசஸ் உளவு விவகாரத்தை நிபுணர் குழு அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அடுத்த வாரம் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேரை பல்வேறு உலக நாடுகள் பயங்கரவாத தடுப்பு போன்ற நடவடிக்கைகளுக்காக வாங்கியுள்ளன.

அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. இந்நிலையில், இந்தியா அந்த உளவு மென்பொருளை கொண்டு 40 பத்திரிகையாளர்கள் உட்பட 300 பேரை உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதில் பல அரசியல் பிரமுகர்களும் அடங்கி உள்ளதாக கூறப்பட்டது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் முடங்கியது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு விளக்கம் தர வேண்டும் என தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தன.

Also Read  2 அடி உயரம் கொண்ட குழந்தையை பெற்றெடுத்த பெண்!

இதுதொடர்பாக பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உள்ளிட்ட 9 பேர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கின் மீதான விசாரணையின் போது முன்னதாக பெகாசஸ் விவகாரம் தொடர்பான ரிட் மனுக்களை மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதைத்தொடர்ந்து பெகாசஸ் விவகாரத்தில் விரிவான விசாரணை கோரிய மனுக்கள் மீதான உச்சநீதிமன்ற விசாரணையில் மத்திய அரசு, “நாட்டின் பாதுகாப்பு கருதி பெகாசஸ் விவகாரத்தில் விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய முடியாது” என தெரிவித்தது.

Also Read  ஜம்மு காஷ்மீர் ஆளுநர் திடீர் ராஜினாமா, புதிய ஆளுநர் நியமனம்

இந்நிலையில், பெகாசஸ் உளவு விவகாரத்தை நிபுணர் குழு அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அடுத்த வாரம் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

23-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. தமிழகத்தில் மழை பெய்யுமா..?

Ramya Tamil

மின் கட்டணம் செலுத்த இரண்டு மாதத்திற்கு விலக்கு வேண்டும் – சீமான்

Shanmugapriya

ரிஹானாவின் படத்தை எடிட் செய்த விஷமிகள்

Tamil Mint

மெஜாரிட்டி திமுக…! ஆளுநர் மாளிகையில் எளிமையாக பதவியேற்பு விழா…!

sathya suganthi

கொரோனாவால் தந்தை இறந்தது தெரியாமல் பழங்கள் அனுப்பிய மகன்…. ! மருத்துவமனையின் அதிர்ச்சியூட்டும் செயல்…!

Devaraj

முன்னாள் நடிகைக்கு கொரானா

Tamil Mint

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை திடீர் உயர்வு..! 3வது அலைக்கான முன்னோட்டமா?

Lekha Shree

உலகின் மிக நீளமான அடல் சுரங்க நெடுஞ்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

Tamil Mint

தலையே போனாலும் தன்மானத்தை இழக்க மாட்டோம்… அதிமுக மீது சேற்றை வாரி இறைத்தால், பதிலடி தரவேண்டி… எச்சரிக்கும் அமைச்சர் ஜெயக்குமார்…

VIGNESH PERUMAL

அசாமில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – கட்டிடங்கள் ஆட்டம் கண்ட காட்சிகள்…!

Devaraj

தமிழக வீராங்கனை பவானி தேவியின் உருக்கமான பதிவு… உடனே பதிலளித்த பிரதமர் மோடி..!

Lekha Shree

மக்களுக்கு இலவசமாக ஆக்சிஜன் வழங்கிய ஆரஞ்சு பழ வியாபாரி…!

Lekha Shree