பெகாசஸ் விவகாரம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்…!


பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பான வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. செப்டம்பர் 13ம் தேதி பெகாசஸ் விவகாரம் தொடர்பான விசாரணை நிறைவடைந்த நிலையில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேரை பல்வேறு உலக நாடுகள் பயங்கரவாத தடுப்பு போன்ற நடவடிக்கைகளுக்காக வாங்கியுள்ளன.

Also Read  கொரோனா இல்லாத கிராமத்திற்கு ரூ.50 லட்சம் பரிசு…! எங்கு தெரியுமா?

அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. இந்நிலையில், இந்தியா அந்த உளவு மென்பொருளை கொண்டு 40 பத்திரிகையாளர்கள் உட்பட 300 பேரை உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதில் பல அரசியல் பிரமுகர்களும் அடங்கி உள்ளதாக கூறப்பட்டது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் முடங்கியது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு விளக்கம் தர வேண்டும் என தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தன.

Also Read  "பத்மஸ்ரீ விருதை திருப்பி தருகிறேன். ஆனால்…!" - கங்கனா ரனாவத் சவால்..!

இதுதொடர்பாக பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உள்ளிட்ட 9 பேர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கின் மீதான விசாரணையின் போது பெகாசஸ் விவகாரம் தொடர்பான ரிட் மனுக்களுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதைத்தொடர்ந்து பெகாசஸ் விவகாரத்தில் விரிவான விசாரணை கோரிய மனுக்கள் மீதான உச்சநீதிமன்ற விசாரணையில் மத்திய அரசு, “நாட்டின் பாதுகாப்பு கருதி பெகாசஸ் விவகாரத்தில் விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய முடியாது” என தெரிவித்தது.

Also Read  முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமின் கோரி மனு…!

இந்நிலையில், செப்டம்பர் 13ம் தேதி பெகாசஸ் விவகாரம் தொடர்பான விசாரணை நிறைவடைந்த நிலையில், நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கேராளா உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3 கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில் இடது சாரிகள் வெற்றி

Tamil Mint

நான் முதலில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளமாட்டேன்: மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்

Tamil Mint

இந்தியாவில் 13 நாளில் 25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி!

Tamil Mint

ஆபாச படம் பார்த்த 68 வயது முதியவர் சிறுமியிடம் செய்த செயல்…..

VIGNESH PERUMAL

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.15 உயர்வு! ஒரு சிலிண்டர் விலை ரூ.915.50

suma lekha

இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு… உலக சுகாதார அமைப்பு தகவல்!

Lekha Shree

கொரோனா 2ம் அலை தீவிரம் – இந்தியாவிற்கு கைகொடுக்கும் நியூயார்க்!

Lekha Shree

இந்திய நகரத்துக்கு யுனெஸ்கோ சிறப்பு அந்தஸ்து… அப்படி என்ன ஸ்பெஷல்..!

Lekha Shree

கோவை: தடையின்றி நடக்கும் கஞ்சா விற்பனையால் விபரீதம்..!

Lekha Shree

150 கிலோமீட்டர் தொலைவில் இருந்து தெளிவாக தெரியும் இமயமலை! – வைரலாகும் புகைப்படங்கள்

Shanmugapriya

பண்டிகை நாளில் தாக்குதல் நடத்த திட்டமா? பாகிஸ்தான் பயங்கரவாதி டெல்லியில் கைது…!

Lekha Shree

சபரிமலை பக்தர்களுக்கு போலி கொரோனா சான்றிதழ்

Tamil Mint