பெகாசஸ் விவகாரம் – நிபுணர் குழு நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவு..!


பெகாசஸ் விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு, நிபுணர் குழு நியமிக்க உத்தரவிட்டுள்ளனர்.

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேரை பல்வேறு உலக நாடுகள் பயங்கரவாத தடுப்பு போன்ற நடவடிக்கைகளுக்காக வாங்கியுள்ளன.

அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. இந்நிலையில், இந்தியா அந்த உளவு மென்பொருளை கொண்டு 40 பத்திரிகையாளர்கள் உட்பட 300 பேரை உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதில் பல அரசியல் பிரமுகர்களும் அடங்கி உள்ளதாக கூறப்பட்டது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் முடங்கியது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு விளக்கம் தர வேண்டும் என தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தன.

Also Read  "கரூர் தமிழ்நாட்டில் தானே உள்ளது?" - கரூர் எம்.பி. ஜோதிமணி திடீர் போராட்டம்…!

இதுதொடர்பாக பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உள்ளிட்ட 9 பேர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கின் மீதான விசாரணையின் போது பெகாசஸ் விவகாரம் தொடர்பான ரிட் மனுக்களுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதைத்தொடர்ந்து பெகாசஸ் விவகாரத்தில் விரிவான விசாரணை கோரிய மனுக்கள் மீதான உச்சநீதிமன்ற விசாரணையில் மத்திய அரசு, “நாட்டின் பாதுகாப்பு கருதி பெகாசஸ் விவகாரத்தில் விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய முடியாது” என தெரிவித்தது.

ஆனால், குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க நிபுணர்கள் குழு அமைக்க தயாராக உள்ளதாகவும், அந்த குழு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் இசைவு தெரிவித்தது.

இதனை தொடர்ந்து பெகாசஸ் விவகாரத்தில் விசாரணை கோரி தாக்கல் செய்தவர்களின் வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இடைக்கால உத்தரவு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் பிறப்பிக்கப்படும் என குறிப்பிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Also Read  நீதிபதி சஞ்சீப் பானர்ஜி இடமாற்றத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்!!

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு இன்று பெகாசஸ் விவகாரம் தொடர்பான வழக்கில் நிபுணர் குழு நியமிக்க உத்தரவிட்டுள்ளனர்.

அப்போது, “பெகாசஸ் விவகாரத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மிக முக்கியமானவை. தொழில்நுட்பங்கள் தேவைதான், ஆனால் குடிமக்களின் தனி மனித பிரைவசி காக்கப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.

தற்போதைய காலகட்டத்தில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த, பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கைகள் தேவை. உளவு பார்ப்பது தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் என்பதில் மாற்றமில்லை, வளர்ச்சி அளவிற்கு தனிமனித உரிமைகளும் முக்கியம், தனிநபர் ரகசியங்கள் காக்கப்பட வேண்டும்.

Also Read  ஆப்கானிஸ்தான் மக்களின் பரிதாப நிலையை விளக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல்…!

தேசிய பாதுகாப்பு எனக்கூறி அரசாங்கம் தப்பிக்கவோ, தங்கள் செயலை நியாயப்படுத்தவோ முடியாது.

பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசு குறிப்பிட்டு எதையும் மறுதலிக்கவில்லை. ஆகவே, மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்க வேண்டியுள்ளது என்பதில் மறுப்பு இல்லை. எனவே நிபுணர் குழு நியமித்து உத்தரவிடுகிறோம். இதனை உச்சநீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும்.

உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் 3 பேர் கொண்ட சிறப்பு நிபுணர் குழு 8 வாரங்களில் விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிடுகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து: 18 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

suma lekha

எதிர்கட்சி தலைவர் யார்…? ஒன்றுகூடி முடிவெடுக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்…!

sathya suganthi

உருக்கமாக பேசிய விராட் கோலி – ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்..!

Lekha Shree

ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மாபெரும் வெற்றி!

Lekha Shree

சென்னையின் 5 தொகுதிகளில் மல்லுக்கட்டும் திமுக Vs அதிமுக…!

Devaraj

இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல் – கேரளாவை சேர்ந்த செவிலியர் பலி

sathya suganthi

அதிமுக வேட்பாளரை ஊருக்குள் நுழைய விடாமல் சண்டை போட்ட பொதுமக்கள்… வைரல் வீடியோ!

Devaraj

தூது செல்ல நான் தயார்.! உங்க மாமா அனுமதிப்பாரா.? தயாநிதி மாறனை கலாய்த்த அண்ணாமலை.

mani maran

பெண் தோழியுடன் காரில் அமர்ந்து தோசை சாப்பிட்ட கணவனை கையும் களவுமாக பிடித்த மனைவி!

Tamil Mint

படிப்புக்காக உணவு டெலிவரி செய்யும் இளம்பெண்!

Shanmugapriya

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 10 குறைப்பு! – தேர்தல் யுத்தியா?

Shanmugapriya

முதல்வர் உத்தவ் தாக்கரேவை அறைவேன் எனக்கூறிய மத்திய அமைச்சர் கைது..!

Lekha Shree