a

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!


ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் உயிரிழந்து வருகிறார்கள்.

எனவே, வேதாந்தா நிறுவனம் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முன்வைத்தனர்.

அப்போது மத்திய அரசு தரப்பு வக்கீல் ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை மத்திய அரசிடம் வழங்கவேண்டும் என கூறினார். மேலும், மாநிலங்களின் ஆக்சிஜன் தேவைக்கேற்ப மத்திய அரசு ஆக்சிஜனை பிரித்து தரும் எனவும் கூறினார்.

Also Read  என்ன சொல்லப் போகிறார் ரஜினி? உச்ச கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் களம்

ஆனால், தமிழக அரசு ஆக்சிஜன் உற்பத்தியில் தமிழகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் கோரிக்கை விடுத்தது.

அப்போது நீதிபதி சந்திரசூட், “இது, தேசம் ஒன்றாக இணைந்திருக்க வேண்டிய தருணம். தற்பொழுது தமிழகத்திற்கு போதுமான அளவு ஆக்சிஜன் உள்ளது. எதிர்காலத்தில் தேவைப்பட்டால் நீதிமன்றத்தை அணுகலாம்” என கூறினார்.

Also Read  பள்ளி மாணவர்களிடையே நடக்கும் சண்டைக்காட்சி…வைரல் ஆகும் காணொளி!

இதையடுத்து ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் தற்காலிகமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என உச்சகநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அங்கு தயாரிக்கப்படும் ஆக்சிஜன் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் மத்திய அரசு மாநிலங்களின் தேவைக்கேற்ப ஆக்சிஜனை பிரித்து வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Also Read  எதிர்கட்சியினர் பேசத் தயங்கும் வார்த்தைகளை பேசி தவறு செய்பவர்கள் வருந்துவார்கள் - டிடிவி.தினகரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் 6000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

Lekha Shree

ஒரு மழைக்கே தாங்காத ஸ்மார்ட் சிட்டி தடுப்புச் சுவர்; கோவையின் அவலம்

Devaraj

தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு என புகார்

Tamil Mint

மேட்டூர் உபரிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்!

Lekha Shree

குணமடைந்து வரும் எஸ்பிபி: பாட, எழுத முயற்சிக்கிறார்

Tamil Mint

லாக் டவுன் தொடருமா, பொதுப் போக்குவரத்து தொடங்குமா?

Tamil Mint

கொரோனா பாசிட்டீவா? டென்ஷன் ஆகாம 104-க்கு கால் பண்ணுங்க!

Lekha Shree

சென்னையில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் திடுக் சம்பவம்

Tamil Mint

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியீடு

Tamil Mint

கட்சி மாறி வந்த 5 பேருக்கு திமுகவில் சீட்…!

Devaraj

களைகட்டிய டாஸ்மாக்….! முதலிடம் பிடித்த சென்னை…! ஒரே நாளில் இவ்வளவு கோடிக்கு விற்பனையா..!

sathya suganthi

“ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அராஜகத்தை தொடங்கிய திமுக..” டிடிவி தினகரன் விமர்சனம்

Ramya Tamil