பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் – உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு..!


பெகாசஸ் விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ராமணா தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு இன்று காலை 10:30 மணி அளவில் தீர்ப்பை வழங்குகிறது.

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேரை பல்வேறு உலக நாடுகள் பயங்கரவாத தடுப்பு போன்ற நடவடிக்கைகளுக்காக வாங்கியுள்ளன.

அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. இந்நிலையில், இந்தியா அந்த உளவு மென்பொருளை கொண்டு 40 பத்திரிகையாளர்கள் உட்பட 300 பேரை உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதில் பல அரசியல் பிரமுகர்களும் அடங்கி உள்ளதாக கூறப்பட்டது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் முடங்கியது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு விளக்கம் தர வேண்டும் என தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தன.

Also Read  பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 10 எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு! என்ன காரணம்..!

இதுதொடர்பாக பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உள்ளிட்ட 9 பேர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கின் மீதான விசாரணையின் போது பெகாசஸ் விவகாரம் தொடர்பான ரிட் மனுக்களுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதைத்தொடர்ந்து பெகாசஸ் விவகாரத்தில் விரிவான விசாரணை கோரிய மனுக்கள் மீதான உச்சநீதிமன்ற விசாரணையில் மத்திய அரசு, “நாட்டின் பாதுகாப்பு கருதி பெகாசஸ் விவகாரத்தில் விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய முடியாது” என தெரிவித்தது.

Also Read  முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சம்மன்!

ஆனால் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க நிபுணர்கள் குழு அமைக்க தயாராக உள்ளதாகவும், அந்த குழு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் இசைவு தெரிவித்தது.

இதனை தொடர்ந்து பெகாசஸ் விவகாரத்தில் விசாரணை கோரி தாக்கல் செய்தவர்களின் வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இடைக்கால உத்தரவு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் பிறப்பிக்கப்படும் என குறிப்பிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Also Read  உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவை இந்தியாவில் அமைக்க திட்டமிடும் முகேஷ் அம்பானி!

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு இன்று காலை 10:30 மணிக்கு பெகாசஸ் விவகாரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கவுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவுக்காக 300 சுவாச கருவிகளை வழங்க ஜப்பான் முடிவு!

Shanmugapriya

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் கைதுக்கு அஞ்சி தற்கொலை?

Lekha Shree

சேவை கட்டண உயர்வை ஒத்திவைத்த ஜியோ… குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள்!

Tamil Mint

ஓ.பி.எஸ். தாயிடம் ஆசி பெற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…!

Devaraj

மதுபானங்களை இலவசமாக வழங்க திட்டம்? எங்கு தெரியுமா?

Lekha Shree

“நியாயத்தின் பக்கம் நின்ற ஈபிஎஸ்-ஓபிஎஸ்க்கு நன்றி” – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Lekha Shree

மகாராஷ்டிராவில் கொரோனா 3வது அலைக்கு வாய்ப்பு – நிபுணர்கள் அதிர்ச்சி ரிப்போர்ட்…!

Devaraj

மேதாது அணை விவகாரம்: ”பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை” – கர்நாடகவின் புதிய முதல்வர்!

suma lekha

சிறுநீரகத்தை விற்று குடும்ப வறுமையை போக்கிய அரசு ஊழியர்!

Tamil Mint

“இரு தரப்பு உறவு மேம்பட, இரண்டு தரப்புமே முயற்சியை மேற்கொள்ள வேண்டும்” – சீனா

Tamil Mint

நடமாடும் நகைக்கடை…! ஹரி நாடாரின் சொத்து மதிப்பு எவ்வளவா?

Devaraj

பிரச்சாரம் தேவையில்லை…மடல்கள் போதும்…! சிறையில் இருந்தபடியே வென்ற வேட்பாளர்…!

sathya suganthi