“நானும் பிராமணன் தான்” – சாதியை பற்றி பேசி சிக்கலில் சிக்கிய சுரேஷ் ரெய்னா..!


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கிரிக்கெட் வர்ணனை நேரலையின்போது “நானும் பிராமணன் தான்” என்று ஜாதியை கூறி தன்னை அடையாளப்படுத்தி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

அவரது இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த விவகாரத்தில் சுரேஷ் ரெய்னா பேசிய காணொளி சமூக ஊடகங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

சுரேஷ் ரெய்னா (34) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்தார்.

Also Read  கண்டா வரச்சொல்லுங்க! கர்ணனாக மாறிய சின்ன தல சுரேஷ் ரெய்னா…

சுரேஷ் ரெய்னா உத்தர பிரதேசத்தின் முராத் நகரில் பிறந்தார். 2002ஆம் ஆண்டு முதல் உள்ளூர் கிரிக்கெட்டிலும் 2005 முதல் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளிலும் பங்கெடுத்தார்.

அப்போது தனது 19-வது வயதில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தடம் பதித்தார். 2011 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தார்.

Also Read  ஆடைகளோடு சிறுமிகளின் மார்பகத்தை தொடுவது பாலியல் குற்றமில்லை - மும்பை நீதிமன்றத்தின் தீர்ப்பால் சர்ச்சை!

இவர் இந்திய அணி கேப்டனாகவும் இருந்திருக்கிறார். தற்போது அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனாக இருக்கிறார்.

தற்போது நடந்து வரும் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் சேலம் அணிகளுக்கு இடையே திங்கட்கிழமை நடந்த ஆட்டத்தின் போது இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா வருணனையில் சேர அழைக்கப்பட்டார்.

அப்போது போட்டி வர்ணனையாளர் சுரேஷ் ரெய்னாவிடம் இந்திய கலாசாரத்தை தழுவுகிறீர்கள் என்று கேட்டார்.

வேட்டி, நடனம், விசில் அடிப்பது போன்ற கலாசாரத்தை சுரேஷ் ரெய்னா கடைபிடிப்பதால் அந்த கேள்வி எழுப்பப்பட்டது.

Also Read  ஐ.டி.ஊழியர்களாக நீங்கள்…! உங்களுக்காக பிரதமர் மோடி போட்ட சூப்பர் டுவிட் இதோ…!

இதற்கு சுரேஷ் ரெய்னா, “நான் நினைக்கிறேன் நானும் பிராமணன்தான். சென்னையில் 2004 இல் இருந்து ஆடுகிறேன். இந்த கலாச்சாரத்தை நேசிக்கிறேன். எனது சக வீரர்களை நேசிக்கிறேன்.

அனிருதா ஸ்ரீகாந்த், பத்ரி, பாலா பாய் (பாலாஜி) ஆகியோருடன் விளையாடியிருக்கிறேன். இங்கிருந்து கற்பதற்கு சில விஷயங்கள் உள்ளது.

நமக்கு சிறந்த நிர்வாகம் உள்ளது. நம்மை ஆழமாக பரிசோதித்து கொள்ளும் உரிமை நமக்கு இருக்கிறது. சென்னை கலாசாரத்தை விரும்புகிறேன். சிஎஸ்கே அணியில் இருப்பது எனது அதிர்ஷ்டம். மேலும் ஆட்டங்களில் பங்கெடுப்பேன் என நம்புகிறேன்” என்று கூறினார்.

ஆனால், சுரேஷ் ரெய்னா தன்னை ஒரு பிராமணன் என அடையாளப்படுத்திக் கொண்டு பேசிய வார்த்தைகள் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் பேசு பொருளாகி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“குட்டி சிரு வந்துவிட்டார்” – மகன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மேக்னா ராஜ்

Tamil Mint

கொரோனா எதிரொலி – திருப்பதியில் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் பாதியாக குறைப்பு

Devaraj

ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதில் இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

Lekha Shree

டெல்லி: கடுங்குளிரால் 6 விவசாயிகள் உயிரிழப்பு!!

Tamil Mint

இவ்வளவு சின்ன வயசுல இவ்வளவு பெரிய சாதனையா? உலகை உன்னிப்பாக பார்க்க வைக்கும் இந்திய இளைஞர்

Tamil Mint

கல்லூரி தேர்வுகளுக்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்றம்

Tamil Mint

வெளிநாடுகளிலிருந்து திரும்புவோருக்கான புதிய விதிகளை வெளியிட்ட மத்திய அரசு

Tamil Mint

கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள 21 டிப்ஸ்கள்…!

Devaraj

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ்தான் காரணம் – பாஜக

Shanmugapriya

பசியால் 2 புலிக்குட்டிகள் உயிரிழந்த பரிதாபம்…!

Devaraj

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 3 லிட்டர் பெட்ரோல், டீசலை இலவசமாக தரும் நபர்!

Shanmugapriya

நடுரோட்டில் துடிக்க துடிக்க இறந்த பெண்…! கொரோனா அச்சத்தால் உதவாமல் வீடியோ எடுத்த மக்கள்…!

Devaraj