‘சூர்யா 40’ – சூப்பர் அப்டேட் கொடுத்த ஒளிப்பதிவாளர் ரத்னவேலு..!


நடிகர் சூர்யா ‘நவராசா’ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தில் நடித்துள்ளார். இது ஆகஸ்ட் 6ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 40’ ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சூர்யா 40 படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்திற் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் சூர்யா வாளை கையில் ஏந்தி செல்லும் புகைப்படம் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. சூர்யா ரசிகர்கள் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Also Read  நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாள் இன்று… கொண்டாடும் ரசிகர்கள்!

மேலும், இப்படத்தின் மாஸ் டைட்டில் ஜூலை மாதத்தில் வெளியாகும் என இப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் கூறினார். இதனால் ரசிகர்கள் சூர்யாவின் பிறந்தநாள் அன்று இப்படத்தின் டைட்டில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் நின்று போன சினிமா படப்பிடிப்புகள் அரசின் தளர்வுகளால் மீண்டும் படிப்படியாக துவங்கப்பட்டுள்ளது.

Also Read  நயன்தாராவுடன் திருமணம் எப்போது? விக்னேஷ் சிவன் சொன்ன சூப்பர் தகவல்..!

அந்த வகையில் நடிகர் சூர்யாவின் ‘சூர்யா 40’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளதாக அப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எனவே, ரசிகர்கள் தற்போது இப்படத்தின் டைட்டிலை எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.

Also Read  'கோமாளி' பட நடிகைக்கு கொரோனா…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ராஷ்மிகா பிறந்தநாளுக்கு வீடியோவுடன் வாழ்த்திய முன்னாள் காதலர்! ராஷ்மிகாவின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

Lekha Shree

சூர்யா தம்பி கார்த்திகாக குரல் கொடுத்த சிம்பு… செம்ம குஷியில் ரசிகர்கள்…!

Lekha Shree

பிரபல தயாரிப்பாளர் கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree

“வலிமை படம் எவ்வாறு இருக்கும்?” – போனி கபூர் ஓபன் டாக்!

Shanmugapriya

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கைவண்ணத்தில் உருவான புதிய படத்தின் டிரைலர்…

VIGNESH PERUMAL

பாகுபலியில் சிவகாமிதேவியின் இளம் வயது கதை: கதாநாயகியாக ஒப்பந்தமானவர் இவர்தான்?

suma lekha

ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணிபுரிந்த சீரியல் நடிகை…! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

தசராவுக்கு வெளியாகும் ‘கேஜிஎப்’ படத்தின் 2ம் பாகம்?

Lekha Shree

உதவிகள் கேட்டு நடிகர் சோனு சூட்டிற்கு குவியும் குறுஞ்செய்திகள்…!

Lekha Shree

‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

100 மில்லியன் வியூஸ்களை கடந்த சிம்புவின் முதல் பாடல்…!

Lekha Shree

நடிகர் விக்ரம் ரூ. 30 லட்சம் நிதியுதவி…!

Lekha Shree