‘ஜெய் பீம்’ விவகாரம்: சூர்யாவுக்கு பெருகும் ஆதரவு…! ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்..!


ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை இழிவுபடுத்தியுள்ளதாக வெடித்திருக்கும் சர்ச்சையால் தற்போது ட்விட்டரில் #WeStandwithSuriya என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஜெய் பீம். இது அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் வாழ்த்து மழை பொழிந்தனர்.

Also Read  திருமணத்திற்காக இ-பாஸ் விண்ணப்பிக்க தற்காலிக தடை…!

ஆனால், இதற்கிடையில் இப்படத்தில் வந்த ஒரு காட்சி குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்துவதாக அமைத்துள்ளது என சர்ச்சை வெடித்தது.

சர்ச்சைக்கு காரணமான காலண்டர் காட்சியில் சிறு திருத்தும் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும், இந்த சர்ச்சை முற்றிலும் முடியவில்லை.

ராஜாகண்ணுவை கடுமையாக தாக்கும் காவல்துறை ஆய்வாளரின் பெயர் ஏன் மாற்றப்பட்டது? என கேள்வியெழுந்தது. இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு சூர்யா பதில் கடிதம் எழுதியதும் சற்று சர்ச்சை அடங்கியது.

இந்நிலையில், காவல்துறை தாக்கியதால் உயிரிழந்த ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள் பெயரில் 10 லட்ச ரூபாய் டெபாசிட் செய்து அதிலிருந்து மாதந்தோறும் அவருக்கு வட்டி கிடைக்க வழி செய்ய முடிவு செய்து இருப்பதாக நடிகர் சூர்யா நேற்று அறிவித்தார்.

Also Read  கீழடியில் ரூ.12 கோடியில் அருங்காட்சியம் அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

இதனிடையே மயிலாடுதுறையில் நடிகர் சூர்யா நடித்த வேல் திரைப்படம் திரையிடப்பட்டது. திரை அரங்கிற்கு வந்த பாமகவினர் திரைப்படக் காட்சியை நிறுத்த சொன்னதால் அத்திரைப்படத்தின் திரைப்படம் காட்சி நிறுத்தப்பட்டது.

நடிகர் சூர்யாவிற்கு எதிராக பாமகவினர் முழக்கமிட்டனர். சூர்யாவின் போஸ்டரை கிழித்தனர். நடிகர் சூர்யா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் அவரை தாக்கும் இளைஞர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட பாமக சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனை கண்டிக்கும் விதமாக ட்விட்டரில் #WeStandwithSuriya என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

Also Read  வாக்களித்த 'குக் வித் கோமாளி' நட்சத்திரங்கள்… வைரல் புகைப்படங்கள் இதோ…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆனைமலை அம்மனை தரிசித்த சிவகார்த்திகேயன்.!

suma lekha

தமிழகத்தில் ஒரேநாளில் 1,908 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

suma lekha

மிஷன் 200 என்பது தான் தி.மு.க., வின் இலக்கு – மு.க. ஸ்டாலின்

Tamil Mint

கமலின் ‘விக்ரம்’ படத்தில் இணைந்த ‘சித்திரம் பேசுதடி’ நடிகர்…!

Lekha Shree

சாவி தொலைந்ததால் சுத்தியல் மூலம் பூட்டை உடைத்து வாக்கு எண்ணிக்கை…!

Lekha Shree

நடைமுறைக்கு வந்தது புதிய ஊரடங்கு தளர்வுகள்…! டீக்கடைகள் திறப்பு…!

sathya suganthi

தமிழகத்தில் வரும் 7-ம் தேதி முதல் 9 சிறப்பு ரயில்கள் இயக்கம்:

Tamil Mint

“புலியின் குகை பூனைகளுக்கு பரிசா?” – தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்..!

Lekha Shree

இணையத்தில் வைரலாகும் ‘வெறித்தனம்’ பாடலின் ரெக்கார்டிங் ஸ்டில்ஸ்…!

Lekha Shree

தீபாவளி பண்டிகை: போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்த சென்னை!

Lekha Shree

தமிழகம்: 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

Lekha Shree

தமிழகம்: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை

Tamil Mint