“அனைத்து மொழிகளிலும் ‘ஜெய்பீம்’ வர வேண்டும்!” – விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ்


உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்படம் நவம்பர் 2ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஐந்து மொழிகளில் அமேசான் தளத்தில் வெளியான இந்தப்படம் பழங்குடி மக்களின் உணர்வுகளையும் குழந்தைகளின் கல்வி முக்கியத்துவத்தையும் தத்ரூபமாக சித்தரித்து இருந்தது.

Also Read  "அந்த நடிப்புக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும்!" - சசிகலா கண்ணீர் வடித்தது பற்றி ஜெயக்குமார் கருத்து..!

இந்த படத்தை பாராட்டி முதல்வர் ஸ்டாலின் முதல் அப்பால் பிரபலங்கள் தங்களின் பாராட்டுகளையும் வாழ்த்தையும் பொழிந்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஐந்து மொழிகளில் அல்ல அனைத்து மொழிகளிலும் ஜெய்பீம் வர வேண்டும்.

Also Read  ஜெயலலிதா வீட்டுக்கு அரசு வழங்கும் இழப்பீட்டு தொகை எவ்வளவு தெரியுமா?

ஆதிக்கமும் சுரண்டலும் ஒடுக்குமுறையும் எங்கெங்கு உள்ளதோ அங்கெல்லாம் ஜெய்பீம் பரவ வேண்டும். படக்குழுவுக்கு பாராட்டுகள்! பெரும் வெற்றிபெற வாழ்த்துகள்!” என பதிவிட்டுள்ளார்.

நேற்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “நம் குழந்தை மூன்று மொழி படிக்க கூடாது என்றவர் தன் படத்தை ஐந்து மொழிகளில் வெளியிடுவாராம். சுயநலமிகளை புரிந்துகொள்வோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Also Read  தோசை சுட்ட 'தளபதி' விஜய் - வைரலாகும் த்ரோபேக் வீடியோ..!

ஹெச்.ராஜாவின் இந்த ட்விட்டர் பதிவுக்கு சூர்யா லைக் போட்டது சமூகவலைதளங்களில் பேசுபொருளாகியது.

இந்நிலையில், விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷா நவாஸ் இவ்வாறு பதிவிட்டுள்ளது, ஹெச்.ராஜாவின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளதாவே தோன்றுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மு.க.ஸ்டாலின் கார் டயருக்கு கீழ் எலுமிச்சையா? – பகுத்தறிவு குறித்து கேள்வி எழுப்பிய நெட்டிசன்கள்…!

sathya suganthi

ஆளுநரை சந்திக்கிறார் ஸ்டாலின்: அதிமுக அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள் .

Tamil Mint

22 கோடி சம்பளம் வாங்கியும் கடனை அடைக்க முடியவில்லை… குமுறும் இளம் நடிகர்…

VIGNESH PERUMAL

நடிகர் பொன்னம்பலத்திற்கு உதவிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி…!

Lekha Shree

ராகவா லாரன்ஸ் பட கதாநாயகி தற்கொலை…!

suma lekha

ஆ.ராசா சர்ச்சை பேச்சு… நழுவுகிறதா திமுக வெற்றி வாய்ப்பு?

Lekha Shree

‘ஜெய்பீம்’ திரைப்பட சர்ச்சை – நடிகர் சூர்யா வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

Lekha Shree

உச்சகட்ட கோவத்தில் பாபா பாஸ்கர்… சண்டையிட்டு கொண்ட ‘குக்கு வித் கோமாளி’ பிரபலங்கள்…!

Lekha Shree

தேர்தல் வேட்டை ஆரம்பம்… ஆவணங்களின்றி பணமும் தங்கமும் குவிய தொடங்கியுள்ளது… பாதிக்கப்படுவது யார்?

VIGNESH PERUMAL

விழுப்புரம்: ஊரக உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்த மக்கள்…! காரணம் இதுதான்..!

Lekha Shree

வெளியானது ‘புஷ்பா’ ட்ரைலர்…!

suma lekha

நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்.!

suma lekha