அன்புமணி ராமதாஸின் 9 கேள்விகள்… பதிலளித்த நடிகர் சூர்யா..!


ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகம் தொடர்புபடுத்தப்பட்டிருப்பதாக நடிகர் சூர்யாவுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம் ஒன்றை எழுதிய நிலையில், அதற்கு பதிலளித்து அறிக்கை ஒன்றை சூர்யா வெளியிட்டுள்ளார்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகம் தொடர்புபடுத்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி, 9 கேள்விகளை எழுப்பி நடிகர் சூர்யாவுக்கு நேற்று கடிதம் எழுதினார். அதில், ஜெய்பீம் திரைப்படத்தில் தேவையின்றியும், திட்டமிட்டும் வன்னியர் சமுதாயம் இழிவுபடுத்தப்பட்டிருப்பது வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

Also Read  "மற்ற படங்கள் குறித்த பதிவுகளை குறைக்க வேண்டும்!" - நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் கோரிக்கை..!

இந்நிலையில், அன்புமணியின் கேள்விகளுக்கு நடிகர் சூர்யா பதிலளித்துஅறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “பழங்குடியின மக்கள் நடைமுறையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் படத்தில் பேச முயற்சித்திருக்கிறோம். கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல, எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கோ, படக்குழுவினருக்கோ இல்லை. சிலர் சுட்டிக்காட்டிய பிழையும், உடனடியாகத் திருத்தி சரி செய்யப்பட்டதைத் தாங்கள் அறீவிர்கள்” என்று கூறியுள்ளார்.

Also Read  கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் எஸ்பிபி

இத்திரைப்படத்தின் கதை, உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. இதில் வரும் கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்கிற அறிவிப்பைப் படத்தின் தொடக்கத்திலேயே பதிவு செய்திருக்கிறோம் எனக் குறிப்பிட்ட சூர்யா, படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை, குறிப்பிட்ட பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்டக் குரல், பெயர் அரசியலால் மடைமாற்றம் செய்யப்பட்டு நீர்த்துப் போகிறது என்ற சூர்யா, நாடு முழுவதிலும் எல்லா தரப்பு மக்களின் பேரன்பும், பேராதரவும் எனக்கு இருக்கிறது. விளம்பரத்திற்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை. சமத்துவமும், சகோதரத்துவமும் பெருக நாம் அனைவரும் அவரவர் வழியில் தொடர்ந்து செயல்படுவோம் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

Also Read  திருவாரூர்: மன்னார்குடி அருகே நெல் கொள்முதலில் மோசடி நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை கண்டுபிடித்துள்ளது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்! வெளியான பகீர் ரிப்போர்ட்…!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி மீது தவறில்லை; மருத்துவர்கள் விளக்கம்

Lekha Shree

நிதி மோசடியில் ஈடுபட்ட அமைப்புகளுக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி

Tamil Mint

கோவில்களில் நடக்கும் குற்றம், முறைகேடுகளை தெரிவிக்க சிறப்பு தொலைபேசி எண்…!

sathya suganthi

உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கும் கொரோனா சான்று கட்டாயம்…!

Devaraj

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி

Tamil Mint

சசிகலாவின் பாதுகாப்பிற்கு ஜெயலலிதாவின் மெய்க்காப்பாளர்கள் நியமனம்!

Tamil Mint

இரட்டை இலைக்கு கை கொடுக்கும் பாஜக… கைகழுவிய பாமக..! கதறும் அதிமுக!

Devaraj

“அ.தி.மு.க ஆட்சியில் இருக்க முக்கிய காரணம் தே.மு.தி.க தான்” – தேமுதிக பொருளாளர் பிரேமலதா

Tamil Mint

சென்னை மயிலாப்பூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

Tamil Mint

டாஸ்மாக் மூலம் ரூ.188 கோடிக்கு மது விற்பனை

Tamil Mint

சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஓராண்டு சிறை…! வழக்கின் முழு விவரம்…!

Devaraj