‘வாடிவாசல்’ அப்டேட் – டைட்டில் லுக் நாளை வெளியீடு… ரசிகர்கள் குஷி..!


வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ள படம் ‘வாடிவாசல்’. இப்படத்தின் டைட்டில் லுக் நாளை மாலை 5:30 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சூரரைப்போற்று’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் நடிகர் சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘சூர்யா 40’, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’, ‘நவரசா’ என பல படங்களை கையில் வைத்திருக்கிறார்.

Also Read  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ரஜினிகாந்த்..! டுவிட்டரில் ட்ரெண்டிங்…!

இதில் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 40’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் வேலைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Also Read  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் பிரபல டோலிவுட் ஹீரோ?

அதனைத்தொடர்ந்து சூர்யா ரசிகர்கள் நீண்ட காலமாக இருந்து கொண்டிருக்கும் திரைப்படம் தான் வெற்றிமாறன்-சூர்யா முதல்முறையாக இணையும் ‘வாடிவாசல்’ திரைப்படம்.

இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் அறிவிப்பு வெளியானபோது படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் இரட்டிப்பானது. ஆனால், தற்போது வரை படத்தை பற்றி எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது.

தற்போது வெற்றிமாறன் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் ‘விடுதலை’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்திற்கு பின் ‘வாடிவாசல்’ படத்தின் வேலைகளை தொடங்குவார் என கூறப்படுகிறது.

Also Read  பிக்பாஸ் வனிதா-ரம்யா கிருஷ்ணன் இடையே வெடித்த மோதல்… வெளியான பரபரப்பு ப்ரோமோ..!

இந்நிலையில் ‘வாடிவாசல்’ படத்தின் டைட்டில் லுக் நாளை மாலை 5:30 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சூரரைப்போற்று படத்திற்கு பிறகு மிகப்பெரிய பிரமாண்ட வெற்றிப்படமாக வாடிவாசல் அமையும் எனவும் வாடிவாசல் படத்தின் மூலம் சூர்யாவின் இமேஜ் இன்னும் பல மடங்கு உயரும் எனவும் எதிர்பார்க்கின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரஜினியாக மாறிய டேவிட் வார்னர்! வைரலாகும் வீடியோ..

HariHara Suthan

மன்சூர் அலிகானுக்கு திடீர் உடல்நலக்குறைவு

sathya suganthi

டப்பிங்கை துவங்கிய அருண் விஜய்..! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

Jaya Thilagan

ஓடிடியில் வெளியாகும் முன்னணி நடிகரின் சூப்பர் ஹிட் இரண்டாம் பாகம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

Tamil Mint

விவகாரத்து குறித்து முதன் முறையாக மனம் திறந்த தொகுப்பாளினி டி.டி… வைரல் வீடியோ…!

malar

அருண் விஜய் – இயக்குனர் ஹரி மாஸ் கூட்டணி! AV33 படத்தின் சூப்பர் அப்டேட்…!

Lekha Shree

100 மில்லியன் வியூஸ்களை கடந்த சிம்புவின் முதல் பாடல்…!

Lekha Shree

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஹிட் ஆன தொடர் மறுஒளிபரப்பாகவுள்ளது… ரசிகர்கள் பெரும் வரவேற்பு!

Tamil Mint

நகைச்சுவை நடிகர் செந்தில் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா…!

Devaraj

‘எனக்கு எவ்வளவு வயதாகிறது?’ – நடிகை ராதிகா ஆப்தேவின் விசித்திர போட்டோ ஷூட் பதிவு

Jaya Thilagan

நடிகை ஷகிலாவின் மகளை பார்த்துள்ளீர்களா? அஸ்வினுடன் ஷகிலா மகள் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல்..!

HariHara Suthan

இன்று வெளியாகிறது ‘நெற்றிக்கண்’ படத்தின் டிரெய்லர்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

Lekha Shree