“என்ன கொடுமை சார் இது!” – வலிக்காமல் தற்கொலை செய்து கொள்ள இயந்திரம்..! சுவிஸ் அரசு அனுமதி..!


தற்கொலை செய்து கொள்வதற்கு என கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரத்திற்கு சுவிட்சர்லாந்து அரசு அனுமதி அளித்துள்ள தகவல் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல கருணைக் கொலை ஆர்வலர் டாக்டர் பிலிப் நிட்ச்கே, சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை இயந்திரம் ஒன்றை அறிமுகப்படுத்தினார்.

இந்த தற்கொலை இயந்திரம் சார்கோ கேப்சூல் என அழைக்கப்படுகிறது. இந்த 3டி பிரிண்டட் இயந்திரத்தை எக்ஸிட் இன்டர்நேஷனல் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

சவப்பெட்டி போன்ற இந்த இயந்திரத்தை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். தற்கொலை செய்துகொள்ள நினைப்பவர்கள் இந்த இயந்திரத்தின் உள்ளே சென்று படுத்துக் கொள்ள வேண்டுமாம்.

Also Read  நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவுக்கு விரைவில் டும் டும் டும்!

அவர்களிடம் அந்த இயந்திரம் இரு கேள்விகளை கேட்குமாம். அதற்கு பதில் அளித்த பிறகு, அதில் இருக்கும் பட்டனை அழுத்தினால் அடுத்த சில நொடிகளில் வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.

அதாவது அந்த பட்டனை அழுத்தியதுவும் அந்த இயந்திரமானது உட்புறத்தில் நைட்ரஜனை நிரப்பி, ஆக்சிஜன் அளவை 21 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாக குறைக்கிறது.

Also Read  பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மாற்றம் - மார்க் ஜூக்கர்பெர்க் அறிவிப்பு..!

இதனால், உள்ளே இருப்பவர்கள் சுயநினைவை இழந்து ஆழ்ந்த கோமாவுக்கு சென்றுவிடுவார்களாம். இது நிகழ 30 வினாடிகள் போதுமாம். அடுத்த ஐந்து நிமிடத்தில் உயிர் பிரிந்துவிடும் என்கிறார்கள்.

எந்தவித அச்சமும் இல்லாமல் ஹைபோக்சியா மற்றும் ஹைபோகாப்னியா, ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு பற்றாக்குறை மூலம் இந்த இறப்பு நிகழ்கிறது.

Also Read  கள்ள உறவு வைத்த இளைஞரை காசு கேட்டு மிரட்டி தற்கொலை செய்ய வைத்த நண்பர்கள்....

இந்த இயந்திரத்திற்கு சுவிட்சர்லாந்து அரசு சட்டபூர்வ அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு காரணமாக கூறப்படுவது என்னவென்றால் கடந்த 2020-ம் ஆண்டு அந்நாட்டில் 1,300 பேர் தற்கொலை செய்து கொண்டது தானாம்.

அடுத்த ஆண்டு முதல் இந்த இயந்திரம் செயல்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த தற்கொலை இயந்திரத்திற்கு சுவிட்சர்லாந்து அரசு அனுமதி வழங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கறுப்பின வீரர்கள் மீது இனவெறிப் பேச்சு… பிரிட்டன் பிரதமர் கண்டனம்..!

Lekha Shree

பில் கேட்ஸ் மீது விசாரணை நடத்திய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்…!

Lekha Shree

அமெரிக்காவிற்கு பிறநாட்டினர் செல்ல அனுமதி…!

Lekha Shree

சுனாமி எச்சரிக்கை – அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

Lekha Shree

வேட்டைக்காரர்களிடம் இருந்து தப்ப கலைமான்கள் கையாண்ட யுக்தி… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

ஐபோன் என நினைத்து ஐபோன் போன்று இருக்கும் மேஜையை ஆர்டர் செய்த சிறுவன்! – பிறகு என்ன ஆனது தெரியுமா?

Shanmugapriya

பள்ளிக்கூடமாக மாறிய கடற்கரை! – சமூக இடைவெளியுடன் நடக்கும் வகுப்புகள்!

Lekha Shree

இறந்தவர்கள் கனவில் வருகிறார்கள்! – கனடாவில் புதிய நோய்?

Shanmugapriya

சீனாவில் பன்றிகளிடையே பரவும் காய்ச்சல்: கொரோனாவை போல பாதிப்பை ஏற்படுத்துமா?

Tamil Mint

ஒமைக்ரானை தொடர்ந்து புதிய கொரோனா தொற்று கண்டுபிடிப்பு.!

suma lekha

10 மாதங்களில் 43 முறை கொரோனா பாதிப்பு…! அசர வைக்கும் பிரிட்டன் தாத்தா…!

sathya suganthi

“வீட்டிற்குள்ளும் இந்தியர்கள் முகக் கவசம் அணிய வேண்டும்” -அமெரிக்க தலைமை மருத்துவ ஆலோசகர் எச்சரிக்கை!

Shanmugapriya