தாம்பரம்: கல்லூரி மாணவி குத்திக் கொலை..! சென்னையை உலுக்கிய பகீர் சம்பவம்..! நடந்தது என்ன?


தாம்பரம் ரயில் நிலையத்தின் வாசலிலேயே கல்லூரி மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை குரோம்பேட்டை, ராதாநகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்வேதா. இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் லேப் டெக்னீசியன் படிப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று மதியம் 2 மணி அளவில் ஸ்வேதா தாம்பரம் ரயில் நிலையத்தின் வாசலில் அவருக்கு அறிமுகமான இளைஞர் ராமன் என்பவருடன் நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்துள்ளனர்.

‘ஏதாவது நடக்கலாம்?’ என்பதை முன்கூட்டியே யூகித்து ஸ்வேதா தனது பாதுகாப்புக்காக சக கல்லூரி மாணவி ஒருவரையும் தன்னுடன் அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

Also Read  5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு!

ஸ்வேதாவும் ராமனும் பேசிக் கொண்டு இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாகத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஸ்வேதாவின் கழுத்தில் ராமன் குத்தியுள்ளார். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த சக மாணவி சத்தம் போட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்துள்ளார்.

Also Read  தை அமாவாசை: ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அலைமோதும் மக்கள் கூட்டம்!

அதையடுத்து ராமனும் தன் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொண்டுள்ளார் என போலீசுக்கு கிடைத்த ஆரம்ப கட்ட தகவல்கள் கூறுகின்றன.

இதை கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறைக்கும் ஆம்புலன்ஸ்-க்கும் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் ஸ்வேதாவையும் ராமனையும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Also Read  கரூரில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது..!

ஆனால், சிகிச்சை பலனின்றி ஸ்வேதா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். ராமனுக்கு 9 தையல்கள் போடப்பட்டுள்ளதாக மருத்துவமனை ஊழியர்கள் கூறியுள்ளனர்.

ராமன் திருக்குவளை பகுதியை சேர்ந்தவர். ஆனால், சென்னை மறைமலை நகர் பகுதியில் தங்கி இருந்தார் என தெரியவந்துள்ளது.

இது குறித்து சேலையூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யும் அளவுக்கு என்ன நடந்தது என்பது குறித்து தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திமுக அரசு கோரிக்கைக்கு உடனே செவி சாய்த்த மத்திய அரசு…!

sathya suganthi

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு ஜாமின்! – ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு!

Lekha Shree

“தமிழக முதல்வரின் நற்பெயரை கெடுக்கவே ஓபிஎஸ் தவறான தகவல்களை கூறுகிறார்” – அமைச்சர் ராஜகண்ணப்பன்!

Lekha Shree

போதை பொருள் வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யனுக்கு ஜாமீன் மறுப்பு..!

Lekha Shree

தமிழகம்: கல்லூரிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!

Lekha Shree

தமிழகத்தில் கொரோனாவின் ஏறுமுகம் தொடங்கியது! – விரைவில் ஊரடங்கிற்கு வாய்ப்பு?

Lekha Shree

சாத்தான்குளம் மரணங்கள்: சப்-இன்ஸ்பெக்டரை தொடர்ந்து இன்ஸ்பெக்டரும் கைது, துரத்தி சென்று பிடித்த டி ஐ ஜி

Tamil Mint

கன்னியாகுமரி-பாம்பன் இடையே கரையை கடக்கும் புயல்: சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

குட் நியூஸ் மக்களே, சென்னையில் மேலும் தளர்வுகள் விரைவில்

Tamil Mint

PSBB பள்ளி விவகாரம் – ஆளுநருக்கு சுப்பிரமணியண் சுவாமி கடிதம்!

Lekha Shree

சென்னையில் களை கட்டும் சரக்கு பிசினஸ்: கண்டுகொள்ளுமா காவல் துறை?

Tamil Mint

நாளை கூடுகிறது தமிழக சட்டமன்றம் – எம்.எல்.ஏக்களுக்கு கொரோனே நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்

sathya suganthi