பிரதமர் மோடியுடன் தமிழக பாஜக எம்எல்ஏக்கள் சந்திப்பு…!


நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக 20 இடங்களில் போட்டியிட்டது.

பாஜக தமிழக தலைவர் எல்.முருகன், எச்.ராஜா உள்ளிட்டோர் தோல்வியடைந்த நிலையில், 4 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் எம்.ஆர்.காந்தி, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சி.கே.சரஸ்வதி ஆகிய 4 பாஜக எம்எல்ஏக்களும் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தனர்.

தேர்தலில் வெற்றி பெற்றதற்காக 4 பேருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி, அரசியல் சூழல் உள்ளிட்டவை குறித்து அவர்களிடம் பிரதமர் கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பு சுமார் 35 நிமிடங்கள் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் பாஜக எம்எல்ஏக்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், மாமல்லபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட ஆன்மிக சுற்றுலா தலங்களை மேம்படுத்த வேண்டும் என்றும்தென் தமிழகத்தில் தொழிற்சாலைகளை கொண்டுவர வேண்டும் என்றும் தமிழகத்துக்கு அதிக தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்றும் பிரதமரிடம் கோரிக்கை வைத்ததாக கூறினார்.

தமிழக அரசியலில் இன்று நடக்கிற தேச பிரிவினைவாத, தேசத்துக்கு எதிரான சக்திகளின் செயல்பாடுகள் குறித்தும் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம் என்றும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.


Also Read  இன்றைய தலைப்புச் செய்திகள் | 01.06.2021

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

2 ஓட்டு வாங்கிய அந்த 3 பேர்…! வரலாற்று சாதனை படைத்த கரூர் வேட்பாளர்கள்…!

sathya suganthi

முழு ஊரடங்கால் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடக்குமா? – சத்ய பிரதா சாகு விளக்கம்…!

Devaraj

உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு செல்லும் ஸ்டெர்லைட்

Tamil Mint

சென்னையில் விற்கப்படும் தரமற்ற தண்ணீர்: திடுக் தகவல்கள்

Tamil Mint

மிஷன் 200 என்பது தான் தி.மு.க., வின் இலக்கு – மு.க. ஸ்டாலின்

Tamil Mint

பேரவையில் ஆளுநர் உரை – எடப்பாடி பழனிசாமி அதிருப்தி…!

sathya suganthi

துரைமுருகனுக்கு முதல்வர் காட்டமான பதில்

Tamil Mint

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி ஏற்பு… அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Tamil Mint

ஆக்ஸிஜன் விநியோகத்தை ஒழுங்குப்படுத்த குழு அமைப்பு.. தமிழக அரசு உத்தரவு..

Ramya Tamil

ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி

Tamil Mint

முதியவர்களின் இலவச பேருந்து பயணங்களுக்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்படும் – போக்குவரத்து கழகம்

Tamil Mint

அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரானா

Tamil Mint