a

வார இறுதியில் 2 நாட்களுக்கும் மாமிசக் கடைகளுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு


தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நோய் பரவலை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும், இரவு நேரங்களில் 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்பதால் முந்தைய நாளான சனிக்கிழமையன்று இறைச்சி கடைகளில் மக்கள் அதிக அளவில் கூடுவதுடன் கொரோனா தடுப்புக் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிடுவதாக புகார் எழுந்துள்ளது. காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் உள்ளிட்ட மீன் சந்தைகளில் தனிநபர் இடைவெளியை மக்கள் பின்பற்றுவதே இல்லை என்றும் புகார்கள் பதிவாகின.

Also Read  கொரோனா பரவல் அதிகரிப்பால் 5 நாள் முழு பொதுமுடக்கம் அறிவிப்பு…!

இதன் காரணமாக சனிக்கிழமைகளிலும் இறைச்சி, மீன் கடைகளை திறக்க தடைவிதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தடை உத்தரவை மீறி கடைகளை திறப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சசிகலா இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்… பிப்ரவரியில் தமிழகம் திரும்ப வாய்ப்பு!

Tamil Mint

“வாத்தி ரெய்ட்”-க்கு பலன் கிடைக்குமா? எல்.முருகன் தாராபுரத்தில் வெற்றி பெறுவாரா?

Devaraj

தொடரும் அரசு பேருந்து ஊழியர்களின் வேலை நிறுத்தம்! இன்று மாலை முத்தரப்பு பேச்சுவார்த்தை!

Lekha Shree

ஸ்டாலினின் ரகசியங்களை வெளியிட போகிறாரா கு க செல்வம்?

Tamil Mint

தமிழக அரசின் பொங்கல் பரிசு இன்று முதல் விநியோகம்

Tamil Mint

நிவாரண பணிகளில் மிக வேகமாக சுழன்று பணியாற்றிய பல மூத்த அமைச்சர்கள் வைரஸ் பாதிப்பில் சிக்கியிருக்கிறார்களா? அதிர்ச்சியில் அதிமுக

Tamil Mint

80 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தபால் மூலம் தமிழகத் தேர்தலில் வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்

Tamil Mint

சாத்தான்குளம் ஆகிறதா செங்கல்பட்டு? படா தொல்லை தரும் படாளம் இன்ஸ்பெக்டர்

Tamil Mint

வருமான வரி வழக்கில் இருந்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி விடுவிப்பு

Tamil Mint

வைகை அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Tamil Mint

உலகளவில் 2.80 கோடி பேருக்கு கொரோனா

Tamil Mint

‘மாஞ்சா நூல் விற்பனை – 45 பேர் கைது

Tamil Mint