ஒன்றியத்துக்குள் தன்னை ஒன்ற வைக்க வேண்டாம் – தமிழிசை சவுந்தரராஜன்


தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றப் பிறகு, பல மாநிலங்கள் ஒன்றிணைந்ததுதான் இந்தியா என்பதை பிரதிபலிக்கும் வகையில் மோடி அரசை ஒன்றிய அரசு என திமுகவினர் குறிப்பிட்டு வருகின்றனர்.

இதற்கு, தமிழகத்தில் மற்றொருபுறம் எதிர்ப்பு கிளம்பி, அது பெரும் விவாதமாக மாறி விட்டது.

மத்திய அரசை, ஒன்றிய அரசு என குறிப்பிடுவதை, தமிழக பா.ஜ.க. தலைவர்களும், புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமியும் எதிர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி அமைச்சர்களுக்கு, துணை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்திய ஒன்றிய புதுச்சேரி ஆட்சி பரப்பின் அமைச்சர் என்ற வகையில், தன் கடமைகளை உண்மையாகவும், மனச்சான்றின்படியும் ஆற்றுவேன் என புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.

ஒன்றிய அரசு என புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக இருக்கும் பாஜகவைச் சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜனே கூறியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இதற்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், “புதுச்சேரியில் புதிய அரசு அமைந்து, வெகு நாட்களுக்கு பின், புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடந்தது.

Also Read  மோடியோ மோடி… பின்றார்யா விஜயன்… ட்விட்டரை தெறிக்கவிட்ட சித்தார்த்!

பதவியேற்பு விழாவில், எதைக்கூறி உறுதிமொழி ஏற்பது என்பது குறித்து, பழைய குறிப்புகளையும், உறுதியேற்பு ஆவணங்களையும், அதிகாரிகள் கொடுத்தனர்.

‘இந்திய யூனியன் டெரிடரி ஆப் புதுச்சேரி’ என்ற ஆங்கில வார்த்தையை, ‘இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப் பரப்பு’ என, மொழி பெயர்த்து இருந்தனர்.

இந்திய அரசின் ஆளுகையின் கீழ் இருக்கும், புதுச்சேரி யூனியன் என்பதை குறிக்கும் விதமாக, மொழி பெயர்க்கப்பட்டது சரியாக இருந்ததால், அதை அப்படியே வைத்து, பதவி ஏற்பு விழாவை நடத்த உத்தரவிட்டேன்.

புதுச்சேரியில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக, பதவி ஏற்பு விழாவில் பின்பற்றப்படும் வழிமுறை தான்; எங்கும், அதை மாற்றவில்லை.
அப்படி இருக்கும் போது, ‘ஒன்றிய அரசு’ என, மத்திய அரசை அழைத்து, தமிழகத்தில் அரசியல் செய்வதை, புதுச்சேரிக்கும் கொண்டு வந்து, சிலர் அரசியல் செய்ய முயற்சிக்கின்றனர்.

இப்படி பேசுகிறவர்களுக்கு, ஒன்று அரசியல் சட்டம் தெரியாமல் இருக்க வேண்டும்; இல்லை, போதுமான அளவுக்கு தமிழ் மொழியில் அறிவு இல்லாமல் இருக்க வேண்டும்.

Also Read  “வாத்தி ரெய்ட்”-க்கு பலன் கிடைக்குமா? எல்.முருகன் தாராபுரத்தில் வெற்றி பெறுவாரா?

இப்படிப்பட்ட குறைபாடு உள்ளவர்கள் மட்டும் தான், இந்த விஷயத்தில் என்னை இழுத்து குறை கூறுகின்றனர்.

‘மத்திய அரசை, ஒன்றிய அரசு என குறிப்பிடுவதை தவறு என, தமிழகத்தில் விமர்சித்தவர்கள், தமிழிசை செய்துள்ள காரியத்துக்கு மட்டும் அமைதியாக இருப்பது ஏன்’ எனக்கேட்டு, பலரும் வம்பு பேசுகின்றனர்.

எதற்கெடுத்தாலும், மத்திய அரசை வம்புக்கு இழுத்து, அரசியல் செய்யும் மோசமான கலாசாரம் தமிழகத்தில் அதிகமாகி வருகிறது.

அந்த வகையில் தான், தற்போது புதுச்சேரி அரசியலுக்கு உள்ளும் நுழைந்துள்ளனர்.

இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சி பரப்பின் என்ற சொற்றொடரை வைத்து, அரசியல் செய்பவர்கள், ஒரு விஷயத்தை கவனிக்க மறந்து விட்டனர்.

புதுச்சேரி புதிய அமைச்சர்களை, தமிழில் பதவி ஏற்கச் செய்தது, இந்த தமிழிசை தான்.
ஒவ்வொரு அமைச்சரும், நான் முழுமையாக உறுதிமொழியை படிக்க, அதைப் பின்பற்றி கூறி, பதவி ஏற்றனர்.

இது, பதவியேற்பு நடைமுறையில் புதிது. இதை பாராட்ட மனம் வராதவர்கள், ‘இந்திய ஒன்றியத்தின்’ என, சொன்னதை வைத்து, வார்த்தை விளையாட்டு நடத்துகின்றனர்.

Also Read  கனிமொழி Vs இந்தி மொழி: சென்னை விமானநிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம்

உறுதிமொழியில் மத்திய அரசு என பொருள்படும்படி, எந்த வார்த்தையுமே இடம்பெறவில்லை.

அப்படி இருக்கும் போது, ஒன்றியம் என்ற வார்த்தையை, மத்திய அரசோடு ஒப்பிட்டு, பதவியேற்பு நிகழ்ச்சி பற்றி பேசுவது, நிகழ்ச்சியையே அவமானப்படுத்துவது போன்றது.

புரோட்டாகால்’ படி, அரசியல் அமைப்பு சட்டப்படி நடந்து கொண்ட என்னை விமர்சிப்பவர்கள், பொது மனிதரான என்னை அரசியலுக்குள் இழுத்து விட்டு, தங்கள் வழக்கமான அரசியலை செய்யலாம் என, நினைக்கின்றனர்; அதையே பேசுகின்றனர்.

அவர்களின் லாவணி கச்சேரிகளுக்கு, வரிக்கு வரி பதிலளிக்க முடியாத சூழலில் இருக்கிறேன்.

காரணம், நான், தெலுங்கானா மாநில கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுனர். அவர்கள் நினைப்பது போல,தமிழக பா.ஜ., தலைவர் அல்ல.

இப்படி மதிப்புமிக்க பொறுப்பில் இருப்பதால், தேவையில்லாத அரசியலுக்குள் நுழைய முடியாது; அதை விரும்பவும் இல்லை.

யாரும் ஒன்றியத்துக்குள் என்னை ஒன்ற வைக்கவேண்டாம்” என தமிழிசை சவுந்திரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் அமித்ஷா.

Tamil Mint

நெல்லையில் கொள்ளையில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு

Tamil Mint

தமிழகம்: மேலும் 1,114 பேர் கொரோனாவால் பாதிப்பு

Tamil Mint

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானத்திற்காக மாநில அரசு நிலம் வழங்கியுள்ளது: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

கனிமொழி மீது 5 பிரிவுகளில் வழக்கு

Tamil Mint

துரைமுருகனுக்கு கொரோனா தொற்று – மகன் கதிர் ஆனந்த் மறுப்பு!

Lekha Shree

பாலியல் புகார்: முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய இடைக்கால தடை!

Lekha Shree

பெண் ஆளுமைகளின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைமை பணிகள்

Tamil Mint

சென்னையில் ஒரே நாளில் 7,564 பேருக்கு கொரோனா பாதிப்பு!

Lekha Shree

வாட்ஸ் ஆப் வழி எப்படி மின் கட்டணம் அறிவது? முழு விவரம் இதோ…!

sathya suganthi

பாலியல் வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பெங்களூருவில் கைது…!

sathya suganthi

தேர்தலில் வெற்றி பெற நம் சாதனைகளில் கவனம் செலுத்துங்கள்: இ.பி.எஸ்

Tamil Mint