திருப்பூர் சுப்ரமணியம் தமிழ் சினிமாவிற்கு வரமா சாபமா ?


கடந்த பல வருடங்களாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. 

அதில் முக்கிய காரணமாக சொல்லக்கூடிய vpf charge அதாவது, qube என்று சொல்லக் கூடிய குழுமம் தயாரிப்பாளர்களிடம் இருந்து அதிகமான கட்டணத்தை வசூலிக்கின்றன. அது மட்டும் இல்லாமல் தமிழ் திரையுலகில் பிரபலமாக ஓங்கி நிற்கும் திருப்பூர் சுப்பிரமணியம் போன்றோர் real image போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களிலிருந்து, கமிஷனாக பல துறைகளில் பெற்ற செல்வாக்கை வைத்து சினிமா துறையை அழித்து வருகிறார்கள் என்றும், அவர்கள் தங்களுடைய சுய லாபத்திற்காக அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கோயம்புத்தூர் மற்றும் வேறு சில பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் பஞ்சாயத்து ராஜ்யத்தை செய்து கொண்டும் இருக்கின்றார்கள் என்று கூறி, ஒரு ஆடியோ சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.

Also Read  சென்னையில் இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும் - வானிலை ஆய்வு மையம்

திருப்பூர் சுப்பிரமணியம் போன்ற ஒரு சிலர் தங்களின் சுயலாபத்திற்காக மற்றும் தாங்கள் சொத்து குவிக்க வேண்டும் என்பதற்காகவும், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களை அழித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ் தயாரிப்பாளர் கவுன்சிலை செயல்படாத நிலையில், புதிய நடப்பு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்று இயக்குனர் பாரதி ராஜா தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் Vpf என்ற கட்டணத்திற்கு எதிராக கடுமையாக போராடி கொண்டு இருக்கின்றனர். கோவிட் 19 காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள் தமிழ்நாடு அரசு திரையரங்குகள் செயல்படலாம் என்று கூறியும் கூட Vpf என்ற கட்டணத்திற்கு தீர்வு கிடைக்கும் வரை எதிராக போராடிக் கொண்டு வருகின்றனர். 

அதுமட்டுமல்லாமல் இன்று, தற்போது  திரையரங்கு சங்கத்தினர், VPF கட்டணத்திற்கு எதிராக பாரதிராஜா தலைமையிலான அணி போராடிக் கொண்டு இருக்கும் நிலையில் அவர்களுடைய ஆதரவு மறுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளன

Also Read  தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்..!

ஆனால் திருப்பூர் சுப்ரமணியம் போன்றோர் Real Image யிடம் கமிஷன் வாங்கிக்கொண்டு, அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டிருக்கிறார் என்று ஒரு தயாரிப்பாளர் அவரின் ஆதங்கத்தை அந்த ஆடியோவில் பதிவு செய்துள்ளார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் தனது பேட்டியையும் கொடுத்தும், தான் பெரிய ஆள் என்று கூறிக் கொண்டும், ரஜினி போன்ற பெரிய நடிகர்களின் பெயர்களை உபயோகப்படுத்தி, தன்னை பிரபலப்படுத்தி கொண்டு வருகிறார். எதற்காக என்றால் தான் கட்டப்பஞ்சாயத்து பண்ண வேண்டும், என்று நினைக்கின்றார் என்ற பேச்சும் தமிழ் திரை உலகில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

Also Read  தமிழகத்துக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘தி பேமிலி மேன் 2’ – சமந்தாவிற்கு குவியும் பாராட்டுக்கள்…!

Lekha Shree

இரவு முழுவதும் முயற்சித்து கொரோனா நோயாளிகளை காப்பாற்றிய சோனு சூட்!

Shanmugapriya

நெட்ஃபிலிக்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்த நவரசா ப்ரோமோ வெளியீடு – ரசிகர்கள் குஷி

HariHara Suthan

முழு ஊரடங்கு நீட்டிப்பு? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

Lekha Shree

சீரியலில் களமிறங்கிய நமீதா… எந்த சீரியல் தெரியுமா?

suma lekha

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021 முடிவுகள் – பின்னடைவை சந்திக்கும் நட்சத்திர வேட்பாளர்கள்!

Lekha Shree

ஜெயலலிதாவை அடுத்து உருவாகிறது எம்.ஜி.ஆரின் பயோபிக்?

Lekha Shree

பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்

Tamil Mint

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் அரசு பொது நூலகங்கள் செயல்பட அனுமதி

Tamil Mint

ஆக்‌ஷன் நாயகனுக்கு ஜோடியாகும் ப்ரியா பவானி சங்கர்…! வெளியான சூப்பர் அப்டேட்!

Lekha Shree

யப்பா சாமி வேலை செய்ய விடுங்க.! : வதந்தி பரப்பியவருக்கு வெங்கட் பிரபு நெத்தியடி பதில்.

mani maran

“மிக விரைவில் அதிமுக சசிகலாவை நோக்கி வரும்” – சி.ஆர். சரஸ்வதி

Lekha Shree