உளவுத் துறையின் தீவிர கண்காணிப்பில் ஓபிஎஸ் மகன்


கடந்த 11ம் தேதி துணை முதல்வரின் மகன் ரவீந்திரநாத்குமார், தனி விமானத்தில் மாலத்தீவுக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடன் நண்பர்கள், சரவணன் பழனியப்பன், விஜயகுமாரன், விஜயானந்த் விநாயகமூர்த்தி, ஆறுமுக நயினார் ஆகிய 4 பேரும் சென்றனர். இவர்கள், மாலத்தீவில் இருந்து மொரீஷியஸ் நாட்டுக்குச் சென்றனர். இவர்கள் இன்பச்சுற்றுலா சென்றதாக கூறப்படுகிறது. விமானதுறையிடம் தனி விமானத்தில் செல்ல அனுமதி பெற்றிருந்தாலும், எம்பி என்ற முறையில் மத்திய அரசின் அனுமதி வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஓபிஎஸ் மகனின் பயணம் குறித்து மத்திய உளவுத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அதில் சரவணன் பழனியப்பனின் தொழில் மற்றும் அவரது தொடர்புகள் குறித்து ஏராளமான புகார்கள் மத்திய அரசுக்கு சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.*

Also Read  PSBB பள்ளியில் ஏ.ஆர்.ரஹ்மான் சந்தித்த மோசமான அனுபவங்கள்! சாதி ரீதியில் துன்புறுத்தப்பட்டாரா?

 

அவருடன் ரவீந்திரநாத்துக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் என்ன வகையான தொடர்பு உள்ளது என்பது குறித்தும் மத்திய அரசு அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இந்நிலையில், மொரீஷியஸ் நாட்டில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு தனி விமானத்தில் அவர்கள் சென்றனர். அங்கு பல்வேறு இடங்களுக்கும் இன்பச்சுற்றுலா சென்றதாக கூறப்படுகிறது. மேலும், பல தொழில் அதிபர்களை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ரவீந்திரநாத்துடன் சென்றுள்ள சிலர், பினாமி சொத்துக்களை முதலீடு செய்வதில் கில்லாடிகள் என்றும் கூறப்படுகிறது. இதனால் ரவீந்திரநாத்குமாரின் பயணம் குறித்து மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

Also Read  தஞ்சை அருகே 56 மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா – பள்ளி மூடல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிளஸ் 2 சிறப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? அமைச்சர் தகவல்

Tamil Mint

இன்னொரு புயல் உருவாகிறதா?

Tamil Mint

11 ஆம் வகுப்பிற்கு மறைமுக நுழைவுத் தேர்வு…! பரிசீலனை செய்ய வலுக்கும் கோரிக்கை…!

sathya suganthi

நாளை வேலூர் செல்கிறார் முதல்வர்

Tamil Mint

அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறையைத் திறந்த தமிழக அரசு

Tamil Mint

தைப்பூசத் திருவிழாவை, பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tamil Mint

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் முருகன் கோவிலில் கடலலை போல் வழியும் பக்தர்கள் கூட்டம் இது வரை 1 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்

Tamil Mint

அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு புது விதிமுறைகள்

Tamil Mint

கொரோனா தடுப்பு பணியில் உயிர் நீர்த்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்- முதலமைச்சர் அறிவிப்பு

sathya suganthi

சிறையில் உள்ள சசிகலாவுக்காக வங்கி வரைவோலை எடுத்தவர்களின் விவரம் வெளியானது

Tamil Mint

தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு என புகார்

Tamil Mint

ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Tamil Mint