சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து காவல்துறையினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு


சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையில் பணியாற்றும் இரண்டு ஊழியர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டியால் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

* அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழா நடைபெற உள்ள நிலையில், பசும்பொன்னில் உள்ள தேவரின் சிலைக்கு தங்கக் கவசம் வழங்கிய, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து அரசு ஊழியர் இருவரால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read  திமுகவில் மீண்டும் மு க அழகிரி?

 

* அந்த சுவரொட்டியில், பாண்டிய நாட்டின் மன்னர் வாரிசு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு 17 கிலோ தங்கம் தந்து அழகு பார்த்த சோழநாட்டுப் பேரரசி சின்னம்மா சசிகலா அவர்களே 2021 ஆம் ஆண்டில் தஞ்சை அரண்மனை மன்னர் பேரரசியாக பொறுப்பேற்று தமிழினம் காக்க தமிழ்நாட்டு மக்களை காக்க ஆணையிடு! ஒற்றர் படை போர் படை தற்கொலை படை தயார் நிலையில் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Also Read  தமிழகத்தில் 'டெல்டா பிளஸ்' வைரஸ் காரணமாக ஒருவர் பலி..! கடுமையாகும் கட்டுப்பாடுகள்!

* இச்சுவரொட்டியின் கீழே காவல்துறை தன்மான போராளி மா. ஒச்சாத்தேவர், பி.பில்பாண்டி, தளபதி, அரசு போக்குவரத்து கழகம் என்று குறிப்பிட்டு இருவரது புகைப்படங்களுடன் அச்சுவரொட்டி மதுரை நகரெங்கும் ஒட்டப்பட்டுள்ளது.

 

* கட்சி சார்ந்தும் சாதி அமைப்புகள் சார்ந்தும் அரசு ஊழியர்கள் இருவர் சுவரொட்டி ஒட்டி வாழ்த்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு…!

Lekha Shree

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமின்!

Lekha Shree

மூக்கு வழி செல்லும் மருந்துதான் குழந்தைகளிடம் கொரோனா தொற்றை தடுக்கும் – மருத்துவர்

sathya suganthi

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் ஒரு கிராம் தங்க நாணயம் இலவசம்..இலவசம்..இலவசம்..!

suma lekha

விஜய்காந்த் உடல்நலம் குறித்த அப்டேட்… விஜயபிரபாகரன் சொல்வது என்ன?

suma lekha

காப்பகத்தில் குழந்தைகள் விற்பனை – தத்து எடுத்த 2 தம்பதிகள் உள்பட 7 பேர் கைது

sathya suganthi

“தோல்வியை சந்தித்தாலும் நாம் தமிழர் கட்சி வளர்ச்சியை கண்டிருக்கிறது” – இயக்குனர் சேரன்

Lekha Shree

“மாணவ, மாணவிகள் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்கலாம்”: அதிரடி அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு.!

mani maran

டி.சி.எஸ் ஊழியருக்கு எதிரான மீடூ வழக்கை விரைவாக கண்காணிக்க ஆர்வலர்கள் முதல்வருக்கு கோரிக்கை

Tamil Mint

நடிகை குஷ்புவின் கார் விபத்துக்கு உள்ளானது.

Tamil Mint

அடுத்த ஆப்பு போக்குவரத்து துறைக்கா….! எச்சரிக்கும் போக்குவரத்து கழகம்…. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படுமா…!

VIGNESH PERUMAL

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கில் தளர்வு? நிபுணர்கள் சொன்ன தகவல்…!

sathya suganthi