தமிழக பொறியியல் கல்லூரி சேர்க்கை குறித்த அதிர்ச்சி நிலவரம்


தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த ஆண்டில் 461 பொறியியல் கல்லூரியில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

 

இதில் நான்கு சுற்றுக் கலந்தாய்வுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 873 மாணவர்களே தகுதி பெற்றிருந்தனர். இதனால் மாணவர் சேர்க்கை தொடங்கும் முன்பாகவே 52 ஆயிரத்து 281 இடங்கள் காலியாகும் நிலை ஏற்பட்டது.

Also Read  சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு- தெற்கு ரயில்வே

 

அக்டோபர் 1ம் தேதி முதல் தொடங்கிய கலந்தாய்வின் மூலம் 69,752 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளது. 93,402 இடங்கள் காலியாக உள்ளது. அதாவது, பொதுக் கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில் 461 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 56.4 சதவீதம் இடங்கள் காலியாகவே உள்ளன.

 

Also Read  மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…!

12 அரசு பொறியியல் கல்லூரிகள், ஒரு அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரி மற்றும் ஒரே ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் மட்டுமே 100 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன.

 

தமிழகத்தில் 20 பொறியியல் கல்லூரிகளில் இந்தாண்டு ஒரு இடம் கூட நிரம்பவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 30 கல்லூரிகளில் 1 சதவீதத்துக்கும் குறைவான இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளனவாம்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு!

Lekha Shree

அதிக மின்னல் வெட்டு தாக்குதல் நடந்த மாநிலங்கள்… முதலிடத்தில் தமிழகம்..!

Lekha Shree

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் இன்று தொடங்குகிறது

Tamil Mint

முல்லைப்பெரியாறு அணை பலமாகவும், பாதுகாப்பாக உள்ளது

Tamil Mint

PSBB பள்ளி விவகாரம் – ஆளுநருக்கு சுப்பிரமணியண் சுவாமி கடிதம்!

Lekha Shree

தேசிய கொடியை அவமதித்தாரா எஸ்.வி.சேகர்?

Tamil Mint

“அனைத்து மதங்களின் பொறுக்கிகளுக்கும் இது பொருந்தும்” – பாடலாசிரியர் தாமரையின் வைரல் பதிவு!

Lekha Shree

உயர்கல்வி நிறுவனங்களில் சுழற்சி முறையில் வகுப்புகள்: அரசு அறிவுறுத்தல்

Tamil Mint

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்…!

Lekha Shree

Meeting between theatre owners, producers begin

Tamil Mint

சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி பரிந்துரை…!

Lekha Shree

எங்க கோட்டை மெட்ராஸூ…! அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி மாஸ் காட்டிய திமுக!

sathya suganthi