லடாக்கில் வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரருக்கு வீர் சக்ரா விருது..!


சீனாவுடன் கடந்த ஆண்டு நடைபெற்ற மோதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் ஹவில்தார் பழனிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வீர் சக்ரா விருதை வழங்கினார். அந்த விருதை அவரது மனைவி பெற்றுக்கொண்டார்.

கடந்த ஆண்டு ஜூலை 16ஆம் தேதி இந்தியா-சீனா எல்லைப் பகுதியான லடாக்கில் இருநாட்டு ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது.

Also Read  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மேகாலயாவுக்கு மாற்றம்…!

இந்த மோதலில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் ஹவில்தார் பழனி வீரமரணம் அடைந்தார். இவருக்கு வானதி தேவி (35) என்ற மனைவியும், பிரசன்னா (10) என்ற மகனும், திவ்யா (8) என்ற மகளும் உள்ளனர்.

இதுதொடர்பாக அன்று ஆட்சியிலிருந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு பழனியின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சமும் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்கப்படும் என்று அறிவித்தது.

Also Read  நூதன முறையில் நகை திருட்டு...! வசமாக சிக்கிய திருடர்கள்! எப்படி தெரியுமா?

அதைத்தொடந்து அவருக்கு வீர் சக்ரா விருது அளிக்கப்படும் என்று மத்திய அரசும் அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பழனிக்கு வீர் சக்ரா விருது அளிக்கப்பட்டது.

இதனை அவர் சார்பாக அவரது மனைவி வானதி தேவி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

Also Read  உலகளவில் இல்லாத உச்சம்…! ஒரே நாளில் 4 லட்சத்தை தொட்டது கொரோனா பாதிப்பு…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிமுக-வில் இருந்து விரட்டப்படுவாரா இபிஎஸ்? சசிகலாவின் திட்டம் என்ன?

Lekha Shree

அதிமுக-பாஜக கூட்டணி முறிவு : சர்ச்சையை கிளப்பிய சிவி சண்முகம்! முற்று புள்ளி வைத்த ஓபிஎஸ்!

sathya suganthi

தமிழகத்தில் கொரோனா தொற்று 2ம் அலை உருவாகாது: அமைச்சர் விஜயபாஸ்கர்

Tamil Mint

அயோத்தி ராமருக்கே விபூதியடித்த ஆசாமிகள் – ரூ. 22 கோடி ஸ்வாகா…!

Devaraj

அக்.1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி.

Tamil Mint

தமிழகத்தில் இன்று 1,449 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

suma lekha

தமிழகத்தில் நீட் தேர்வு விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை குறைவு..!

suma lekha

யூபிஎஸ்சி தலைவராக பேராசிரியர் பிரதீப் குமார் ஜோஷி நியமனம்:

Tamil Mint

திரையரங்குகள், கல்லூரி திறக்க அனுமதி..! எங்கு தெரியுமா?

Lekha Shree

கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ரா காலமானார்

sathya suganthi

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – 20,000 பக்தர்களுக்கு அனுமதி..!

Lekha Shree

45 வயது மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவக்கம்…!

Lekha Shree