a

சென்னையை சீரமைக்க வருகிறது முதலமைச்சர் ஸ்டாலினின் ‘ப்ராஜெக்ட் ப்ளூ’ திட்டம்…!


தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தருணத்தை பயன்படுத்தி சென்னையை மீண்டும் சிங்கார சென்னையாக மற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சென்னையின் பழைய பொலிவை மீட்டு எடுக்கும் வகையில் தெருத்தெருவாக அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுவரை கிட்டத்தட்ட 8800 டன் குப்பைகள் சென்னையில் சுத்தப்படுத்தப்பட்டு அகற்றப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் சென்னையாக மாற்றும் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தை தமிழ்நாடு அரசு விரைவில் கையில் எடுக்க உள்ளது.

சென்னையில் உள்ள சாலைகளை சுத்தம் செய்வதோடு அதை உலகத்தரத்திற்கு மாற்றவும் திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளது.

Also Read  "காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் நான் பேசியதை திரித்துக் கூற வேண்டாம்" - கார்த்திக் சிதம்பரம் எம்.பி

இதில் முதல் மற்றும் முக்கியமான திட்டம் ‘ப்ராஜெக்ட் புளு’. இது சென்னையின் அனைத்து கடலோரப் பகுதிகளையும் அழகுபடுத்தும் திட்டம் ஆகும்.

இந்த திட்டத்தின் கீழ் சென்னையில் புதிதாக பீச்சுகள், நீர் விளையாட்டு அமைப்புகள், கடல் கண்காட்சி, சுற்றுலாத்தலங்கள் அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு எடுத்திருக்கிறது.

சென்னையின் சுற்றுலா வளத்தை மேம்படுத்தும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து சென்னையின் அனைத்து சாலைகளும் புதுப்பிக்கப்பட உள்ளன. விரைவில் இதற்கான பணிகள் நடக்க உள்ளது.

சாலைகள் அனைத்திலும் வெளிநாடுகளில் இருப்பது போல வண்ண விளக்குகள் அமைக்கும் திட்டமும் உள்ளது. அடுத்ததாக சென்னையின் அனைத்து பாலங்கள், சப்வே அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு மாற்றி அமைக்கப்பட உள்ளன.

Also Read  சுற்றுலா பயணிகளுக்கு ரூ.18,000 வழங்கப்படும்! - மால்டா அரசு அதிரடி அறிவிப்பு!

அதே போல் கிண்டி, எக்மோர் பேருந்து நிலையங்களை புதுப்பிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அண்ணா நூலகத்தை மொத்தமாக புதுப்பிக்கும் திட்டமும் உள்ளது.

மேலும் அண்ணாநகர் டவர் பார்க்கில் புதிய வசதிகளை ஏற்படுத்தும் திட்டங்களை தமிழ்நாடு அரசு வைத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.

சென்னையில் மிகப்பெரிய விளையாட்டு காம்ப்ளக்ஸ் அமைக்கப்படும் என்றும் சொல்கிறார்கள். அனைத்து விதமான விளையாட்டு மீதும் கவனம் செலுத்தும் வகையில் சர்வதேச தரத்தில் இது அமைக்கப்படும் என கூறுகிறார்கள்.

Also Read  தமிழகத்தில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

பெங்களூரில் பல்வேறு தெருக்களில் நிறைய பார்க்குகள், மினி பாரஸ்ட் அமைக்கப்பட்டு இருப்பது போல சென்னையிலும் அமைக்கப்பட உள்ளது.

அதோடு குழந்தைகள் வரும் வகையில் அறிவியல் மற்றும் கணித பூங்காக்களும் சென்னையில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னையில் டெஸ்லா போன்ற வாகனங்களை பயன்படுத்த ஊக்குவிக்க உள்ளனர். இதற்கான சார்ஜிங் வசதி உள்பட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திட்டங்கள் அனைத்துக்குமான நிதி ஒதுக்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி

Tamil Mint

சென்னையின் புது காவல் ஆணையராக பொறுப்பேற்ற மகேஷ்குமார் அகர்வால்: முதல் வாக்குறுதி என்ன தெரியுமா?

Tamil Mint

அயனாவரம் ரவுடி என்கவுண்டர்- 4 காவலர்கள் இடமாற்றம்

Tamil Mint

உதயநிதி ஸ்டாலின் ஏன் கைது செய்யப்பட்டார்?

Tamil Mint

“ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை” – பள்ளிக்கல்வித்துறை

Lekha Shree

தக்காளி சாப்பிட்ட தங்கத்தமிழ் செல்வன்… கலக்கலான புகைப்படங்கள் இதோ!

Devaraj

நீட் தேர்வுக்கு மீண்டும் ஒரு பலி: கோவையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி

Tamil Mint

சபாநாயகர் தேர்தலில் போட்டியிடும் அப்பாவு.. திமுக அறிவிப்பு..

Ramya Tamil

நாளை வேலூர் செல்கிறார் முதல்வர்

Tamil Mint

கட்சித் தலைவர்கள் புகைப்படம் இல்லாத நிவாரணப் பை – அசத்தும் தமிழக அரசு

sathya suganthi

பிரதமரின் காலில் விழ முயன்ற அதிமுக எம்பி – மோடி கொடுத்த சூப்பர் அட்வைஸ்! இது தேவையா?

Lekha Shree

சட்டமன்றத்திற்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரம்:

Tamil Mint