“திரைவானின் சூரியன் ரஜினி!” – திரைத்துறையின் உயரிய விருதை பெறும் சூப்பர்ஸ்டாருக்கு முதலமைச்சர் வாழ்த்து!


இந்திய சினிமாவின் தந்தையாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே பெயரில் சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

இந்திய சினிமாவின் உயரிய விருதாக தாதா சாகேப் பால்கே விருது போற்றப்படுகிறது. இந்த விருதினை தமிழ்நாட்டில் இருந்து நடிகர் திலகம் சிவாஜியும், இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரும் பெற்றுள்ளனர்.

Also Read  'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியை புகழ்ந்த டோலிவுட் முன்னணி ஹீரோ!!!

இந்த நிலையில், 2019-ம் ஆண்டுக்கான இந்த விருது ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து இன்று டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தாதா சாகேப் பால்கே விருதினை நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கினார்.

இதை முன்னிட்டு திரைத்துறையை சேர்ந்த பலரும் நடிகர் ரஜினிகாந்துக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்துக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

Also Read  பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

அதில், “திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெறும் அன்பு நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சம்நிறை வாழ்த்துகள்!

திரைவானின் சூரியன் ரஜினி அவர்கள், தமிழ்த் திரையுலகை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும்! வாழ்த்துகள்!” என பதிவிட்டுள்ளார்.

Also Read  மார்ச் 5-ம் தேதி ரிலீஸ் ஆகிறது 'மிருகா' திரைப்படம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் கைது!

Lekha Shree

“புட்ட பொம்மா” ஜோடிக்கு கொரோனா…! வருத்தத்தில் ரசிகர்கள்…!

Devaraj

நடன இயக்குனர் சிவசங்கரின் சிகிச்சைக்கு நிதியுதவி அளிக்க முன்வந்த நடிகர் சோனு சூட்..!

Lekha Shree

Bachelor பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை… விரைவில் டும்..டும்..டும்..!

suma lekha

‘அண்ணாத்த’ முதல் நாள் முதல் ஷோ வசூல் மட்டும் இவ்வளவு கோடியா? ரசிகர்கள் குதூகலம்..!

Lekha Shree

ராபின் சிங் காரை பறிமுதல் செய்த சென்னை போலீஸ்: உள்ளே என்ன இருந்தது தெரியுமா?

Tamil Mint

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஹீரோவாக சுழற்றி அடிக்க வரும் சூர்யா?

Lekha Shree

ஜேம்ஸ் பாண்ட்சீரிஸ் 25வது படம் நோ டைம் டு டை… செப்டம்பர் 30ம் தேதி வெளியீடு

suma lekha

25 வயது தோற்று போகும் கொள்ளை அழகில் 55 வயது மாதுரி தீட்சித்…! கலக்கல் போட்டோ ஷூட்…!

sathya suganthi

பிரபல தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் மறைவு : ரசிகர்கள் இரங்கல்

suma lekha

5 மாதங்கள் கழித்து ஓடிடிக்கு வரும் சிம்புவின் ‘ஈஸ்வரன்’…!

Lekha Shree

விண்வெளியில் ஷூட்டிங் நிறைவு: பூமிக்கு திரும்பிய படக்குழு.!

mani maran