தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு! – எவைகளெல்லாம் செயல்பட தடை?


தமிழ்நாட்டில் தரவுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 12ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மாதம் 10ம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

பின்னர், கடுமையான கட்டுப்பாடுகளால் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

Also Read  விஜயகாந்துக்கு வழக்கமான பரிசோதனை - தேமுதிக விளக்கம்

ஜூலை 5ம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அந்த ஆலோசனையின் முடிவில் தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு வரும் 12ம் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Also Read  உவர் நிலத்தில் நெல் சாகுபடி செய்து அசத்திய விவசாயி!

பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்திருந்தாலும் சிலவற்றுக்கான தடை தொடர்வதாக தெரிவித்துள்ளது.

எவைகளெல்லாம் செயல்பட தடை?

மாநிலங்களுக்கு இடையேயான அரசு மற்றும் தனியார் போக்குவரத்திற்கான தடை தொடர்ந்து நீட்டிப்பு.

உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்டவை தவிர சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை.

Also Read  தி.மு.க., வுடன் கூட்டணி இல்லை: கமல்ஹாசன் திட்டவட்டம்

திரையரங்குகள், நீச்சல் குளங்கள், உயிரியல் பூங்காக்கள், மதுக்கூடங்கள், பள்ளி-கல்லூரிகள் செயல்பட தடை.

பொதுமக்கள் கலந்துகொள்ளும் சமுதாயம் மற்றும் அரசியல் சார்ந்த கூட்டங்களை நடத்த தடை.

பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், கோவில் திருவிழா, குடமுழுக்கு நடத்த தடை.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அதிமுகவில் இருந்து நீக்கம்..!

Lekha Shree

தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் செய்ய வேண்டியதும்..! கூடாததும்…!

sathya suganthi

தமிழகத்தில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம்

Tamil Mint

சென்னை விமான நிலைய சரக்கு பிரிவு பகுதியில் 500க்கும் மேற்பட்ட தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்ந்து பணிகளை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Tamil Mint

முன்னாள் நீதிபதி கர்ணன் கைது

Tamil Mint

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு? – இன்று அறிவிப்பு!

Lekha Shree

குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா 3-வது அலை – பெற்றோர்களே உஷார்…!

sathya suganthi

அரசு அதிகாரிக்கு இவ்வளவு சொத்தா? அம்பலமான அதிர்ச்சித் தகவல்…

Tamil Mint

டிராபிக் ராமசாமிக்கு கண்ணீர் வணக்கம் – சீமானின் உருக்கமான அஞ்சலி

sathya suganthi

எப்படி இருந்த சாக்‌ஷி இப்படி ஆகிட்டார்!

Tamil Mint

50 லட்சம் தமிழக மக்களின் ஆதார் விவரங்கள் லீக்…! வெளியான அதிர்ச்சியான தகவல்…!

sathya suganthi

கொரோனா நிவாரண நிதி: நடிகர் விஜய்சேதுபதி ரூ.25 லட்சம் நன்கொடை…!

sathya suganthi