தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்..! எந்தெந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு?


தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் என்றும் இது வரும் நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கரையை நோக்கி நகரக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Also Read  PSBB பள்ளியில் ஏ.ஆர்.ரஹ்மான் சந்தித்த மோசமான அனுபவங்கள்! சாதி ரீதியில் துன்புறுத்தப்பட்டாரா?

இதன் காரணமாக இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதேபோல் திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர், கன்னியாகுமரி, விழுப்புரம், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

ஏனைய தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய வட கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக சென்னையில் கனமழை மேலும் ஒரு நாளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  "தடையின்றி மின்விநியோகம் வழங்கப்படும்!" - அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால் குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு இன்று மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read  தாறுமாறாய் எகிறிய தக்காளி விலை..! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“தமிழர்கள் எங்கு இருந்தாலும் அவர்களுக்கு தமிழ்நாடு தான் தாய்வீடு” – முதலமைச்சர் ஸ்டாலின்

Lekha Shree

மளிகை தொகுப்பு தொடர்பாக எழுந்த புகார்கள் – உணவு வழங்கல் துறை அதிரடி உத்தரவு!

Lekha Shree

புதிய நாடாளுமன்ற கட்டடம் சுதந்திர இந்தியாவின் தனித்துவ அடையாளமாக விளங்கும் – தமிழக முதல்வர்

Tamil Mint

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்…!

Lekha Shree

அதிமுகவில் சலசலப்பு! – சினேகம் பாராட்டும் முன்னாள் அமைச்சர் காமராஜ், திவாகரன்..!

Lekha Shree

இது திமுக அரசு அல்ல; மக்களுக்கான தமிழக அரசு : தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

sathya suganthi

தமிழகத்தில் அடுத்த 6 மணி நேரத்திற்கு கனமழை: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

Tamil Mint

மோடியோ மோடி… பின்றார்யா விஜயன்… ட்விட்டரை தெறிக்கவிட்ட சித்தார்த்!

Lekha Shree

திமுகவை ஆட்சிக்கு கொண்டு வர சதி… சசிகலாவை மறைமுகமாக சாடிய எடப்பாடி…!

Tamil Mint

“சிவ சங்கர் பாபாவை தூக்கில் போடுங்கள்” – பிரபல நடிகை ஆவேசம்!

Lekha Shree

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்த அனுமதி: சென்னை உயர்நீதிமன்றம்

Tamil Mint

நீட் தேர்வு : பொதுமக்கள் கருத்து கூறலாம் – ஏ.கே. ராஜன் குழு அறிவிப்பு!

sathya suganthi