ஜெயலலிதாவின் ‘வேதா இல்லம்’ யாருக்கு சொந்தம்?… இன்று வெளியாகும் தீர்ப்பு..!


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தடை விதித்து ஜெ.,வின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் எனும் வீட்டில்தான் வசித்து வந்தார். இதனையடுத்து,அவர் மறைந்த நிலையில், இந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற உள்ளதாக கடந்த 2017 ஆம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

Also Read  அமராவதி அணையில் உபரி நீர் திறப்பு: கரையோர மக்கள் பதற்றம்

இதனைத் தொடர்ந்து,அந்த இடத்தை தமிழக அரசு அரசுடைமை ஆக்குவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், இதனை எதிர்த்து போயஸ் கார்டனில் குடியிருப்போர் மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் வீடு! அரிய தகவல்கள்! -  AanthaiReporter.Com | Tamil Multimedia News Web

நீண்ட மாதங்களாக நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று பிற்பகல் வெளியாக உள்ளது. இதுதொடர்பாக சென்னை உயநீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி இந்த தீர்ப்பினை வழங்குகிறார்.

Also Read  அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா எழுதிய கடிதம்… அதிமுகவில் நிலவும் பதற்றம்…!

முன்னதாக தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக சட்டமியற்ற அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், தங்களிடம் ஆலோசிக்காமலேயே வீட்டுக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாய் என இழப்பீடு நிர்ணயித்தது தவறு என்றும் தீபா, தீபக் தரப்பில் வாதாடப்பட்டது.

அதேநேரத்தில் அரசு தரப்பில் இல்லத்தை கையப்படுத்தும் முன்பு அனைத்து தரப்பு கருத்துக்களை கேட்டதாகவும், அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட விதத்திலும் பல்வேறு பிரச்னைகளை ஜெயலலிதா எதிர்கொண்ட போது தீபக், தீபக் ஆகியோர் அவருக்கு உறுதுணையாக இருந்ததில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

Also Read  சூடுபிடிக்கும் அரியர் தேர்ச்சி விவகாரம்

இந்த நிலையில், வேதா இல்லம் அரசுக்கு சொந்தமாகுமா? என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மட்டும் தான் வெளியிடுவோம் – மாஸ்டர் திரைப்படக் குழு

Tamil Mint

சாத்தான்குளம் ஆகிறதா செங்கல்பட்டு? படா தொல்லை தரும் படாளம் இன்ஸ்பெக்டர்

Tamil Mint

தமிழகத்தில் அடுத்த ஆட்சி யாருடையது?… டைம்ஸ் நவ்-சி வோட்டர் கருத்துக்கணிப்பு…!

Devaraj

ஓயாமல் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது: இனி நடவடிக்கை பாயும்: ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட முதல்வர்.!

mani maran

டிசம்பர் 13 முதல் பொறியியல் செமஸ்டர் தேர்வு – அண்ணா பல்கலைக்கழகம்!

suma lekha

ஆகஸ்ட் இறுதி வரை ஈ பாஸில் மாற்றம் இல்லை, இபிஎஸ் அதிரடி முடிவு

Tamil Mint

ஹாட்ரிக் அடிக்கும் மம்தா…! 4 இல் 3 பங்கு தொகுதிகளை கைப்பற்றி அபாரம்…!

sathya suganthi

ஆளுநரை சந்திக்கிறார் ஸ்டாலின்: அதிமுக அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டுகள் .

Tamil Mint

முதியவர்களின் இலவச பேருந்து பயணங்களுக்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்படும் – போக்குவரத்து கழகம்

Tamil Mint

முன்னாள் சென்னை மேயரின் மகன் கொரோனாவுக்கு பலி

Tamil Mint

தமிழ்நாடு: செப்டம்பர் 13-ல் மாநிலங்களவை தேர்தல்…!

Lekha Shree

தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட்: இன்று புதிதாக 1,573 பேருக்கு கொரோனா தொற்று!

suma lekha