வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை: அதிமுக-வின் அலட்சியம் தோலுரிக்கப்பட்டதா.?


நிதி நிலையில் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரை விட தமிழ்நாடு மிகவும் பின் தங்கி இருப்பதாக வெள்ளை அறிக்கை வெளிட்ட நிதியமைச்சர் PTR. பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த முழு விவரங்களை சற்று விரிவாக காண்போம்.

வெள்ளை அறிக்கை என்பது அரசின் நிதி நிலையை மக்கள் அறிய வெளியிடப்படுகிறது. 2001-ல் ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து கடைசியாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு ஆரம்பம் முதலே முந்தைய அதிமுக அரசால் மூடி மறைக்கப்பட்ட தமிழக பொருளாதாரத்தின் உண்மை முகத்தை மக்களுக்கு எடுத்து காட்டி வருகிறது. அந்த வகையில் அதிமுக அரசில் எந்த அளவுக்கு நிதி நிர்வாகம் மோசமடைந்துள்ளது என்பதை ஒரு வெள்ளை அறிக்கை வாயிலாக ஆகஸ்ட் 9-ம் தேதியான இன்று வெளியிடுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்கள் முன்னிலையில் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அதில், அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் முந்தைய அதிமுக அரசு என்னதான் செய்தது என்ற கேள்வியை எழுப்ப வைக்கிறது. அதில் சில முக்கியமான விவரங்களை காணலாம்.

 • வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாடு அரசின் வருவாய் 4-ல் ஒரு பங்கு குறைந்துவிட்டது.
 • தமிழ்நாடு அரசின் தற்போதைய கடன் ரூ.5,70,189 கோடியாக உள்ளது.
  *ஏற்கனவே பலவீனமாக இருந்த பொருளாதாரம் கொரோனா செலவும் சேர்ந்ததால் நிதி நிலை மிகவும் மோசமானது.
 • தமிழ்நாடு அரசின் வருமானம் மிகவும் குறைந்துள்ளது.
 • 2020-2021-ல் மட்டும் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக உள்ளது.
  *அரசுடைய அன்றாட செலவுகளுக்கு கூட கடன் வாங்கும் நிலை அதிமுக ஆட்சியில் இருந்துள்ளது.
 • எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு தமிழ்நாட்டில் வருமானம் குறைந்துள்ளது.
 • கடைசி 5 ஆண்டுகளில் அதிமுக அரசின் வருவாய் பற்றக்குறை 1,50,000 கோடியாக அதிகரித்துள்ளது.
 • தமிழ்நாடு பெற்றுள்ள கடனுக்காக தினசரி செலுத்தும் வட்டித்தொகை ருபாய் 115 கோடி.
 • பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் தாசரி செலுத்தும் வட்டித்தொகை ரூ.180 கோடி
 • ஒவ்வொரு குடிமகனும் ஓராண்டிற்கு செலுத்தும் வட்டித்தொகை மட்டுமே 7,700 ரூபாய்
 • ஒவ்வொரு குடிமகனுக்கான மொத்த கடன் பொதுத்துறை நிறுவனங்களையும் சேர்த்து ரூபாய் 1,10,100.
  *மின்சார வாரியம், போக்குவரத்து துரையின் கடன் மட்டுமே ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது.
 • ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் அரசுப்பேருந்துகளின் பேருந்துகளை இயக்க ரூ.59 நஷ்டம் ஏற்படுகிறது.
  *மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதி 33% குறைந்துவிட்டது.
 • வரி செலுத்த வேண்டியவர்களிடம் இருந்து வரியை வசூலிக்காமல் இருப்பது மக்களுக்கு செய்யும் துரோகம்
 • பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கிய கடன்கள் எச்சரிக்கை நிலையை காட்டுகின்றன.
 • மாநில அரசின் வரி வருவாய் படிப்படியாக குறைந்து வருகிறது.
 • அதிமுக அரசால் அளிக்கப்பட்ட கடன் உத்தரவாதத்தில் 90% மின் வாரியத்துக்கே அளிக்கப்பட்டுள்ளது.
 • அதிமுக ஆட்சியில் உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் பாதி அளவுக்கு கூட வரி வருவாய் இல்லை
 • 2020-21 -ல் மட்டும் ஒட்டுமொத்த உற்பத்தியில் 8.7% ஆக சரிந்துவிட்டது.
Also Read  பிச்சை எடுப்பது போல் நடித்து கொள்ளையடித்த நபர் கைது…!

இந்த வெள்ளை அறிக்கையில் மிக மிக முக்கியமான ஒரு சாராம்சம் என்னவென்றால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மத்திய அரசின் வரி மீது மிக தெளிவான விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு லிட்டர் பெட்ரோல் டீசல் மீதான வரி ரூ.12-ல் இருந்து ரூ.32-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் மீதுவரியாக விதிக்கப்படும் ரூ.32-ல் இருந்து ரூ.31.50-ஐ மத்திய அரசு தான் எடுத்து கொள்வதாகவும், எஞ்சிய 50 பைசாவை மட்டுமே அனைத்து மாநிலங்களுக்கும் பிரித்து கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் உள்ளது. அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்தின் ஒப்புதல் இன்றி ரூ.1 லட்சம் கோடி ஊதாரித்தனமாக செலவிடப்பட்டுள்ளது. அதிமுக அரசின் வீண் செலவால் தனி நபர் ஒருவருக்கு ரூ.50,000 இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியாளர்களுக்கு அரசியல் உறுதியும், நிர்வாக திறமையும் இல்லை. கடந்த 7 ஆண்டுகளில் சரியாக ஆட்சி நடத்தாததே இதற்கு காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. இவை அனைத்துமே சரி செய்யக்கூடியது தான் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மிகவும் நம்பிக்கையாக கூறியிருக்கிறார். எனவே, திமுக அரசு இயந்திரம் எவ்வாறு சரி செய்ய போகிறது என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

Also Read  டெஸ்லாவின் 'ஆட்டோ பைலட்' உற்பத்திக்கு தலைமை ஏற்கும் தமிழர் அசோக் எல்லுசுவாமி…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா 2ம் அலை! – தமிழகத்தில் 1000-ஐ தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

அண்டை மாநிலங்களில் ஒமிக்ரான் பரவல் : அதிகாரிகளுடன் இன்று முதல்வர் ஆலோசனை..!

suma lekha

“கர்ணன்” திரைப்படம் குறித்து ஜோதிமணி எம்.பி. என்ன சொன்னார் தெரியுமா?

Devaraj

கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு.. இன்று பதவியேற்பு விழா!

suma lekha

தமிழகம்: 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!

Lekha Shree

பெண்ணுக்கு பாலியல் தொல்லை – பெரம்பலூர் அதிமுக நிர்வாகி கைது..!

Lekha Shree

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

Tamil Mint

இன்ஸ்டாகிராமில் பாலியல் சீண்டலா…! கவலை வேண்டாம் வருகிறது புதிய அப்டேட்…!

Devaraj

வாழை கழிவுகளில் விமான பாகம் தயாரிக்கலாம் – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

Tamil Mint

ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி

Tamil Mint

சென்னை திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை: நாடகமாடிய ஊழியர் கைது!

suma lekha

கல்லூரிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் பொன்முடி விளக்கம்..!

Lekha Shree