ஒமைக்ரான் அச்சுறுத்தல் – தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?


தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதாலும் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் வகை கொரோனா மீண்டும் உலக நாடுகளுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் என்ற புதிய வகை தொற்று மிக வேகமாக 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் கடந்த டிசம்பர் 2ம் தேதி ஒமைக்ரான் பாதிப்பு முதன்முதலாக கண்டறியப்பட்டது. ஆனால், அசுர வேகத்தில் பரவ தொடங்கியிருக்கும் ஒமைக்ரான் தொற்றால் இதுவரை இந்தியாவில் 20,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தினசரி கொரோணா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒருநாள் பாதிப்பு 1000 உயர்ந்து புதிதாக 2,730 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையில் நேற்று முன்தினம் 876 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், அது தற்போது 1,489 ஆக அதிகரித்துள்ளது.

இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் ஒமைக்ரான் வகை தொற்று பரவாமல் தடுக்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்ற ஆலோசனையில் ஈடுபட்டார்.

கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றுவரும் ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Also Read  மு.க. ஸ்டாலின் மீதான கிரிமினல் அவதூறு வழக்குகள் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்

இந்த ஆலோசனையில் முடிவில் தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதாலும் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் நாளை முதல் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

இரவு நேர ஊரடங்கு நேரத்தில் (இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை.

பால், பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, ஏ.டி.எம். பேன்ற அவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி.

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சனி கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது பொது போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் ஆகியவை இயங்காது. உணவகங்களில் பார்சல் சேவை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படும். இதர மின் வணிகர்களுக்கு அனுமதி இல்லை.

Also Read  கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் - வைரலாகும் மு.க.ஸ்டாலின் வீடியோ

கடைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், கேளிக்கை விடுதிகள், உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அனுமதி.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.

அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 9ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த கூடாது. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்.

பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

வரும் 9ம் தேதி மற்றும் வார இறுதி நாட்களில் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை விமானம், ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்பதற்காக விமானம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்தி கொள்ள அனுமதி.

பொதுப் பேருந்துகள், புறநகர் ரயில்கள், மெட்ரோ ரயில்களில் உள்ள இருக்கைகளில் 50% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி.

அனைத்து மழலையர் காப்பகங்கள் (creche) தவிர மழலையர் விளையாட்டு பள்ளிகள். நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை .அ

Also Read  தமிழகத்தில் 4000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

னைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதி.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளை அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதி. இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதி.

பயிற்சி நிலையங்கள் செயல்பட தடை விதிக்கப்படுகிறது. பொருட்காட்சிகள் மற்றும் புத்தக கண்காட்சி நடத்துவது தற்போது ஒத்திவைப்பு.

அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவ கல்லூரிகள் தவிர அனைத்து கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுப்பு.

திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதி.

உள் அரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதி. உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்கங்கள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்களுடன் நடத்த அனுமதி.

அழகு நிலையங்கள், சலூன்கள் போன்றவை ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.

துணிக் கடைகள் மற்றும் நகைக் கடைகளில் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மக்களே இரவு நேர ஊரடங்கிற்கு தயாராகுங்கள்? – தமிழக முதல்வர் இன்று அவசர ஆலோசனை!

Lekha Shree

ஓடும் காரில் பற்றி எரிந்த தீ…. 9 பேர் உயிர் தப்பிய அதிசயம்….

Lekha Shree

குறிவைக்கப்பட்ட 5 முன்னாள் அமைச்சர்கள்! டிஜிபி கந்தசாமிக்கு திமுக கொடுத்த அசைன்மெண்ட்!

Lekha Shree

தேர்தல் அறிக்கையை கடைசி வரை கண்ணில் காட்டாத நாம் தமிழர் கட்சி…! கதறும் தமிழர்கள்…!

Devaraj

தொடர்மழை எதிரொலி – சென்னையில் இருமடங்காக உயர்ந்த காய்கறி விலை..!

Lekha Shree

கொரோனாவால் அதிகமாக உயிரிழப்பது இவர்கள் தான்.. மருத்துவர் தகவல்….

Ramya Tamil

தைத்திருநாளில் தலைவர்கள் வாழ்த்து…

Tamil Mint

நடிகை மீரா மிதுன் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்..!

suma lekha

திருமண நிகழ்ச்சிக்கு செல்வோருக்கு இ-பதிவில் புதிய கட்டுப்பாடுகள்…!

Lekha Shree

“அமமுக கட்சியின் தலைவர் பதவி சசிகலாவிற்காக காலியாக உள்ளது” – டிடிவி தினகரன்

Lekha Shree

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம்

Tamil Mint

முழு ஊரடங்கு எதிரொலி – ரூ. 218 கோடிக்கு விற்பனையான மதுபானங்கள்…!

Lekha Shree