a

தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிப்பு… எவ்வளவு நாட்களுக்கு தெரியுமா?


தமிழகத்தில் மேலும் 1 வாரம் தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்கு பின் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 10ம் தேதி முதல் 2 வாரங்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. வரும் 24ம் தேதி ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அந்த ஆலோசனையில், இந்த மாத இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் கொரோனா பரவல் உச்சக்கட்டத்தை எட்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்தனர்.

மேலும், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரைத்தனர்.

Also Read  தமிழகத்தின் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு...! அவையில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு...!

அதன்பின்னர், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக்கட்சி குழு கூட்டம் தொடங்கியது.

அதில் முதல்வர் ஸ்டாலின், “முழு ஊரடங்கை விடுமுறைகாலம் என்று பொதுமக்கள் நினைக்கின்றனர்; இது கொரோனா காலம் என்பதை மக்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை.

Also Read  பாலியல் புகார்: முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய இடைக்கால தடை!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை; தளர்வுகளை பயன்படுத்தி அவசியமில்லாமல் வெளியில் சுற்றுவது அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது” என கூறினார்.

அந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ஊரடங்கை நீடிக்க அனைத்து கட்சிகளும் ஆதரவளித்தனர். அதைத்தொடர்ந்து 1 வார காலத்துக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலப்டுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதனால், நாளை ஒருநாள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அத்தியாவசிய கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Also Read  தமிழகத்தில் மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கு நீட்டிப்பு…!

இந்த ஆலோசனை கூட்டங்களின் முடிவில் மேலும் 1 வாரம் தமிழகத்தில் கடுமையான தளர்வுகளற்ற ஊரடங்கு நீடிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமல் ஹாசன்… வைரலாகும் நம்மவரின் ‘நச்’ ட்வீட்…!

Bhuvaneshwari Velmurugan

காயத்ரி ரகுராமுக்கு நீதிமன்றம் சம்மன்…!

sathya suganthi

ஒரு தலை காதலால் 8 மாத கைக் குழந்தை வெட்டிக் கொல்லப்பட்ட கொடூரம்…!

Devaraj

ஊரடங்கு குறித்து முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை

Tamil Mint

குப்பைகளை கொட்ட ஜனவரி 1 முதல் கட்டணம்!

Tamil Mint

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி இலவசமாக இயக்கப்படும் மினி பேருந்துகள்!

Lekha Shree

இரட்டை இலைக்கு கை கொடுக்கும் பாஜக… கைகழுவிய பாமக..! கதறும் அதிமுக!

Devaraj

பாலியல் புகார்: முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய இடைக்கால தடை!

Lekha Shree

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் இன்று மாலை 6 மணிக்கு சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி.

Tamil Mint

டில்லி லோக்பாலில் புகார் – வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் சிக்குமா துணை முதல்வர் ஓபிஎஸ் குடும்பம்!

Tamil Mint

தேசிய கொடி ஏற்றிய திருநங்கை! திருச்சியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Tamil Mint