தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு! – கூடுதல் தளர்வுகள் என்னென்ன?


தமிழ்நாட்டில் தரவுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 12ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மாதம் 10ம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

பின்னர், கடுமையான கட்டுப்பாடுகளால் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

ஜூலை 5ம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அந்த ஆலோசனையின் முடிவில் தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு வரும் 12ம் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Also Read  இந்தியா, பாகிஸ்தான் பயணத்திற்கு NO சொன்ன ஐக்கிய அரபு அமீரகம்.! ஏன் தெரியுமா?

கூடுதல் தளர்வுகள் என்னென்ன?

வரும் 5ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஓட்டல்கள், தேனீர் கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி.

தமிழகம் முழுவதும் வரும் 5ம் தேதி காலை 6 மணி முதல் பொது போக்குவரத்திற்கு அனுமதி. மாவட்டங்களுக்கு இடையே இருந்த இ-பதிவு நடைமுறை ரத்து.

Also Read  "இயற்கை 2 எடுக்க திட்டமிட்டிருந்தோம்"- நடிகர் ஷாம்

தமிழ்நாடு முழுவதும் அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறந்துகொள்ள அரசு அனுமதி. ஆனால், திருவிழாக்கள், குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.

வரும் 5ம் தேதி முதல் அனைத்து துணிக்கடைகள், நகைக்கடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி. வணிக வளாகங்கள் (ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்/மால்கள்) காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படலாம்.

Also Read  தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி. இறுதி சடங்குகளில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி.

உடற்பயிற்சி கூடங்கள், யோகா நிலையங்கள் உரிய காற்றோட்ட வசதியுடன் இயங்கலாம்.

டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை செயல்பட அனுமதி.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் ஏப்ரல் 6-ல் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு! ஒரே கட்டமாக தேர்தல்!

Bhuvaneshwari Velmurugan

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்: தமிழிசை செளந்தரராஜன்

Tamil Mint

கொரோனாவில் இறந்ததாக கூறி குழந்தை விற்பனை : மதுரை காப்பகத்துக்கு சீல்…!

sathya suganthi

அடுத்தடுத்து கொரோனாவிடம் சிக்கும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள்…!

Devaraj

வெற்றியை வேறு மாதிரி கொண்டாடிய உதயநிதி! ஸ்டாலினுக்கு கொடுத்த சூப்பர் கிப்ட்!

Lekha Shree

போலீஸ் ஆகணுமா? அப்போ இதை படிங்க

Tamil Mint

மு.க.ஸ்டாலினுக்காக நாக்கை அறுத்து பெண் நேர்த்திக்கடன்…!

sathya suganthi

கொரோனா பரவல் குறித்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொன்ன அதிர்ச்சி தகவல்…!

Devaraj

நீட் தேர்வுக்கு மீண்டும் ஒரு பலி: கோவையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி

Tamil Mint

“கர்த்தரின் மறுபிறவி போல காட்டிக்கொள்ளும் சீமான்” – முதலமைச்சரிடம் நீதி கேட்ட விஜயலட்சுமி…!

sathya suganthi

ரேவதியை தொடர்ந்து அப்ரூவராக மாறும் இரு காவலர்கள், பாதுகாப்பை பலப்படுத்த நீதிமன்றம் உத்தரவு

Tamil Mint

தேதி குறித்து கர்ப்பிணிகளுக்கு சிசேரியன் செய்தால் கடும் நடவடிக்கை – மா.சுப்பிரமணியன்

sathya suganthi