a

தமிழகத்தில் ஊரடங்கை நீடிக்க பரிந்துரை..!


தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கொரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவலை தடுக்க கடந்த மே 24 ஆம் தேதியில் இருந்து தளர்வுகள் எதுவும் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்தார்.

இந்த முழு ஊரடங்கு உத்தரவு 2 வாரங்கள் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, 36 ஆயிரம் என்ற தினசரி தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து 19 ஆயிரம் என்ற எண்ணிக்கைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து 7 ஆம் தேதியில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

Also Read  கொரோனா 2ம் அலையின் எதிரொலி - முன்னணி ஹீரோக்களின் படப்பிடிப்புகள் நிறுத்தம்?

நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் ஒரு நாளின் தொற்று எண்ணிக்கை 17 ஆயிரத்து 321 ஆக குறைந்திருந்தது. கொரோனா பரவல் படிப்படியாக குறைந்தாலும், உயிரிழப்புகளில் அந்த சூழ்நிலை எழவில்லை.

இந்த நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பாகவும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Also Read  வெளிநாட்டில் மருத்துவ பயின்ற 500 பேர் தமிழகத்தில் பணியாற்ற அனுமதி

இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், வருவாய் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, மாவட்ட கலெக்டர்களுடனும், மருத்துவ நிபுணர் குழுவுடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்தாலோசனை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

Also Read  யூடியூபர் மதன் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு…!

இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிமுக 49-வது ஆண்டு தொடக்க விழா: முதல்வர் கொடியேற்றினார்

Tamil Mint

ஊழல் குறித்து விவாதிக்க போட்டி போடும் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி! நிபந்தனைகள் விதிக்கும் ஸ்டாலின்… முழு விவரம் இதோ!

Tamil Mint

மக்கள் நீதி மைய மூத்த தலைவர் கொரோனாவால் மரணம்

Tamil Mint

“ஸ்டாலினை தேர்தலில் பாஜகவின் சாதாரண தொண்டரே தோற்கடிப்பார்!” – கராத்தே தியாகராஜன்

Lekha Shree

உதயநிதி ஸ்டாலின் வருகின்ற தமிழக சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட உள்ளாரா?

Tamil Mint

ஆக்ஸிஜன் விநியோகத்தை ஒழுங்குப்படுத்த குழு அமைப்பு.. தமிழக அரசு உத்தரவு..

Ramya Tamil

துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார ஓபிஎஸ்?

Tamil Mint

9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி: முதலமைச்சர் அறிவிப்பு!

Bhuvaneshwari Velmurugan

சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதி…! சிறையில் அடைக்கப்பட்ட ஒரே நாளில் உடல்நலக்குறைவு!

sathya suganthi

திருநெல்வேலியில் மீண்டும் நயினார் நாகேந்திரன்? விட்டதை பிடிப்பாரா?

Lekha Shree

எந்த தவறும் செய்யாத நான் விசாரணை ஆணையை எதிர்கொள்ள தயார்: அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா

Tamil Mint

தமிழகத்தில் 2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்

Tamil Mint