தமிழகம்: மயிலாடுதுறை தமிழகத்தின் 38-வது மாவட்டமாக உருவாகவுள்ளது


தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வர் பழனிசாமி துவக்கி வைக்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். 

கடந்த 2019 ஆம் ஆண்டு புதிதாக செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்துார், தென்காசி என 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தில் 37 மாவட்டங்கள் இருந்தது. 

Also Read  அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு : எவற்றுக்கெல்லாம் தடை - முழு விவரம்

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நாகப்பட்டினம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு மயிலாடுதுறை மாவட்டமாக உருவாக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

அதைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் மயிலாடுதுறை சிறப்பு அதிகாரியாக, ஐஏஎஸ் அதிகாரி லலிதா, எஸ்.பியாக ஸ்ரீநாதா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். 

Also Read  தொடர்மழை மழை காரணமாக செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரியிலிருந்து உபரிநீர் திறப்பு!!

இந்நிலையில், நாளை காணொலி காட்சி மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். 

அதன்படி தமிழகத்தின் 38 ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read  மதுரையில் எய்ம்ஸ் எப்போது? மத்திய அரசை கண்டித்த எம்.பி., சு.வெங்கடேசன்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..

Ramya Tamil

தடகள பயிற்சியாளர் மீது வெளிநாட்டில் இருந்தும் குவியும் பாலியல் புகார்….!

sathya suganthi

ஜனவரி 10 வரை கிராமசபை கூட்டங்கள் நடக்கும்: மு.க. ஸ்டாலின்

Tamil Mint

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை – தமிழக அரசு அறிவிப்பு

Tamil Mint

“பள்ளி கட்டணத்தில் முதல் தவணையான 40% கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க போவதில்லை”

Tamil Mint

தருமபுரியில் குவியும் கொரோனா சடலங்கள்: திணறும் ஊழியர்கள்!

sathya suganthi

ரேஷன் கடைகளில் இலவச முகக் கவசங்கள் வழங்கும் திட்டம் – முதல்வர் தொடங்கி வைத்தார்

Tamil Mint

தமிழகத்தில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம்

Tamil Mint

கிசான் திட்டத்தை நிறுத்திய தமிழக அரசு

Tamil Mint

நடிகர் விவேக் கடிதத்திற்கு பிரதமர் இந்திராகாந்தி பதில்…! மிரட்சியான அனுபவத்தை பகிர்ந்த விவேக்…!

Devaraj

மணமகளின் தந்தைக்கு மெழுகு சிலை – திருமண நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி…!

Devaraj

செவிலியர்களின் கால்களில் விழுந்த இஎஸ்ஐ மருத்துவமனை டீன்!

Shanmugapriya