a

“11ம் வகுப்பு நுழைவுத்தேர்வு ரத்து” – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!


பதினோராம் வகுப்பு நுழைவுத்தேர்வு நடத்த கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பில், ‘ஆல் பாஸ்’ செய்யப்பட்ட மாணவர்களுக்கு பிளஸ் 1 சேர்க்கைக்கு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது.

அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மேல்நிலை பிரிவுகளில் அதிகப்படியான விண்ணப்பங்கள் வந்தால், மாணவர்களுக்கு அப்பிரிவுடன் தொடர்புடைய, கீழ்நிலை வகுப்பு பாடங்களில் இருந்து, 50 வினாக்கள் அடங்கிய வினாத்தாள் தயாரிக்கப்பட்டு, நுழைவுத் தேர்வு நடத்த அறிவுறுத்தப்பட்டது.

மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பாடப்பிரிவுகளை ஒதுக்கலாம் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது.

Also Read  நாளை தமிழக பட்ஜெட் – 11வது முறையாக தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ்

நோய்த் தொற்றுக் காலகட்டத்தில் படிக்க ஆர்வத்துடன் குறிப்பிட்ட பிரிவில் சேர அரசுப் பள்ளியை நாடிவரும் மாணவரை இது போல் நுழைவுத் தேர்வு மூலம் வடிகட்டி, அப்பிரிவை மறுப்பது நியாயமற்றது என்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடை தெரிவித்தது.

அரசுப் பள்ளிகளில் தேவை ஏற்படின் கூடுதல் வகுப்புகள் தொடங்க அறிவுறுத்தாமல், மாணவர் கோரும் பிரிவை மறுப்பது நியாயமற்ற அணுகுமுறை என்றும் குறிப்பிட்டது.

Also Read  தமிழ்நாடு மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு… முழு விவரம் இதோ..!

கூடுதல் வகுப்புகள் தொடங்க அரசிடம் பணம் இல்லையா? அல்லது போதிய அளவு ஆசிரியர்களை நியமிக்க, தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் இல்லையா? என கேள்வி எழுந்தது.

11ஆம் வகுப்பிற்கு மறைமுகமாக நுழைவுத் தேர்வு என்பதை எந்த வகையிலும் ஏற்க இயலாது என்றும் சமூக நீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு, அதே பள்ளியில் பத்தாம் வகுப்புப் படித்த மாணவர்கள் அதே பள்ளியில் விரும்பும் பாடப்பிரிவில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை வலியுறுத்தியது.

Also Read  முழு ஊரடங்கை நீட்டிக்க முடியாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்நிலையில் தற்போது பதினோராம் வகுப்பு நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வாய்ப்பில்லை” – பள்ளிக்கல்வித்துறை

Shanmugapriya

மாவட்ட ஆட்சியர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

sathya suganthi

பொறியியல், பாலிடெக்னிக் அல்லது பிளஸ் ஒன் தொடர்புடையவரா நீங்க? அப்ப இதை கட்டாயம் படிங்க…

Tamil Mint

தொலைக்காட்சி, சமூக ஊடகங்களில் கலக்கும் அதிமுக விளம்பரங்கள்

Jaya Thilagan

எங்க கோட்டை மெட்ராஸூ…! அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி மாஸ் காட்டிய திமுக!

sathya suganthi

தமிழகத்துக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட்

Tamil Mint

கடந்த தேர்தல்களில் பாமக தோல்வி அடைந்தற்கான காரணம், பாமக நிர்வாகிகள் சரிவர தேர்தல் பணியாற்றவில்லை என்பதுதான்.

Tamil Mint

கொரோனாவை அடுத்து அச்சுறுத்தும் கருப்பு பூஞ்சை – 518 பேர் பாதிப்பு!

Lekha Shree

ஊசியை அகற்ற குழந்தையின் விரலை வெட்டிய கொடூரம்..!

Lekha Shree

இனி அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டாக் கட்டாயம்: முழு தகவல்கள்

Tamil Mint

அமைச்சர் துரைக்கண்ணு மறைவு வைகோ இரங்கல்

Tamil Mint

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு:

Tamil Mint