“30 நாட்களில் பொதுமக்களின் மனுக்களுக்கு தீர்வு” – டிஜிபி சைலேந்திர பாபு


தமிழக காவல்துறையின் 30வது டிஜிபியாக சைலேந்திரபாபு ஐபிஎஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். ஓய்வுபெறும் டிஜிபி திரிபாதி அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.

பின்னர் முன்னாள் டிஜிபி திரிபாதிக்கு பாரம்பரிய முறைப்படி வழியனுப்பு விழா காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் டிஜிபி சைலேந்திர பாபு. அப்போது, “காவல்துறை தலைமை இயக்குநர் பதவி ஏற்றிருப்பது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு. இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது பதவிக்காலத்தில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாரமரிப்புக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் அளிக்கும் மனுக்களில், குறிப்பாக மாநில முதல்வரிடம் கொடுத்த மனுக்கள் மீது 30 நாட்களில் துரித விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும்.

காவலர்களைப் பொருத்தவரை, பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மனித உரிமைகளை மதித்து அவர்கள் நடந்து கொள்ள வேண்டும். அதற்கான பயிற்சி அவர்களுக்கு வழங்கப்படும்.

Also Read  தமிழகத்தில் முழு ஊரடங்கு நீடிக்குமா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

காவலர் குறைகள் தீர நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இலக்கை அடைய பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இதற்கு ஊடகங்கள் உதவ வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

டிஜிபி சைலேந்திர பாபு கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 1962ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி பிறந்தார். பின்னர், குழித்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பு முடித்தவர் மதுரை விவசாய பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.

பின்னர் 1987ம் ஆண்டு தமிழக ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார். முதன் முதலில் தர்மபுரி மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளராக தனது பணியை தொடங்கினார்.

அதன் பின்னர் கோபிசெட்டிபாளையம், சேலம், திண்டுக்கல், செங்கல்பட்டு, சிவகங்கை, கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார்.

Also Read  திருமண நிகழ்ச்சிக்கு செல்வோருக்கு இ-பதிவில் புதிய கட்டுப்பாடுகள்…!

சென்னை காவல் ஆணையரகத்தின் கீழ் அடையாறு துணை ஆணையராக பணியாற்றினார். கடந்த 2001ம் ஆண்டு டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார். 2006ம் ஆண்டு ஐஜியாக பதவி உயர்வு பெற்றார்.

பின்னர் 2008ம் ஆண்டு சிறப்பு அதிரடிப்படை ஐஜியாக நியமிக்கப்பட்டார். 2010ம் ஆண்டு கோவை நகர காவல் ஆணையராக செயல்பட்டார்.

2012ம் ஆண்டு ஏடிஜிபி ஆக பதவி உயர்வு பெற்ற போது கடலோர காவல் குழும ஏடிஜிபியாக செயல்பட்டார்.

பின்னர் 2019ம் ஆண்டு டிஜிபியாக பதவி உயர்வு பெற்ற போது ரயில்வே டிஜிபியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி பணி ஓய்வு பெறுவதை அடுத்து 7 டிஜிபிக்கள் போட்டியில் இருந்தனர்.

Also Read  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் சீட்டு வினியோகம் ஆரம்பம்…!

இறுதியாக யுபிஎஸ்சி அனுப்பிய பட்டியலில் முதலிடத்தில் இருந்த சைலேந்திரபாபு அடுத்த சட்ட ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.

இதை அடுத்து இன்று 11:30 மணி அளவில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் முறைப்படி தமிழகத்தின் அடுத்த சட்ட ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு பதவி ஏற்றுக்கொண்டார்.

அவரிடம் டிஜிபி திரிபாதி பொறுப்பை ஒப்படைத்த பின்னர் புதிய டிஜிபிக்கு காவல்துறை உயரதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிமுக-திமுக: கட்சி தாங்க வேற…! ஆன தேர்தல் அறிக்கை ஒன்னுதான்…! – நெட்டிசன்கள் கலாய்…!

Devaraj

கீழடியில் ரூ.12 கோடியில் அருங்காட்சியம் அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

Tamil Mint

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது?

Tamil Mint

10 எண்றத்துக்குள்ள.. ஈபிஎஸ் கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்…

Tamil Mint

“தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது” – கனிமொழி எம்.பி.

Lekha Shree

எங்க கோட்டை மெட்ராஸூ…! அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி மாஸ் காட்டிய திமுக!

sathya suganthi

அதிகரிக்கும் கொரோனா; மீண்டும் சிகிச்சை வார்டுகளாக மாறும் கல்லூரிகள்

Devaraj

தமிழக அரசியலில் அதிரடியாக களமிறங்கும் அமித்ஷா : போயஸ் இல்லத்தில் ரஜினியை சந்திக்கிறார்

Tamil Mint

ரம்ஜான் திருநாள் – களைகட்டிய ஆன்லைன் பிரியாணி விற்பனை!

Lekha Shree

கத்தரி வெயிலுக்கு மத்தியில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை…!

sathya suganthi

முதலமைச்சர் கொரோன நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.280.20 கோடி வந்துள்ளது – மு.க.ஸ்டாலின்

sathya suganthi

குஷ்பு கைதானதை கண்டித்து பாஜக தலைவர்கள் கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்

Tamil Mint