a

இரவு நேர ஊரடங்கு – பேருந்து போக்குவரத்தில் மாற்றம்!


தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 20ம் தேதி முதல் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் பகலில் மட்டுமே இயக்கப்படும் என மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்த ஊரடங்கு உத்தரவில், இரவு நேரங்களில் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்து சேவை இயங்க அனுமதி இல்லை.

பகல் நேரங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலை தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read  அதிமுக செயற்குழு- எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் வருகை

அரசு விதித்துள்ள இரவு நேர ஊரடங்கினைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு வசதியாக சென்னையில் இருந்து குறுகிய மற்றும் தொலைதூர ஊர்களுக்கும் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கும் இயக்கப்படுகின்றன பேருந்துகளானது, அதிகாலை 4 மணி தொடங்கி இரவு 8 மணிக்குள்ளாக சென்றடைகின்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அரசு விடுமுறைகளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால். அன்றைய தினம் பேருந்துகள் இயக்கப்படமாட்டது. இந்த வசதியினை பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டு உரிய வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Also Read  சசிகலாவின் தமிழக வருகை - எல்லை மீறிய மீம் கிரியேட்டர்கள்! இது வேற லெவல்!

விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பயணத் தேதியை மாற்றி அமைத்துக்கொள்ள ஏதுவாக அருகே உள்ளபேருந்து நிலைய கட்டுப்பாடு அலுவலகத்தை அணுகி தகுந்த மாற்று ஏற்பாடு செய்து கொள்ளலாம். அப்படி இல்லாத பட்சத்தில் அக்கட்டண தொகையானது திருப்பி வழங்கப்படும்.

தளவழி முன்பதிவு செய்த பயணிகள் தளவழி மூலமாக பயணக்கட்டணத்தை திரும்பப்பெற வசதி செய்யப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஞாயிற்றுக்கிழமையில் முன்பதிவு செய்துள்ள பயணிகளும் மேற்குறிப்பிட்ட நடைமுறையை பின்பற்றப்படும்.

Also Read  தமிழகத்தில் படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடு - சுகாதாரத்துறை செயலாளர்

மாநகர் போக்குவரத்து கழகத்தை பொறுத்தமட்டில் பயணிகள் நின்று பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். அரசு விதித்துள்ள இரவு ஊரடங்கினை பின்பற்றி அதிகாலை 4 மணிமுதல் இரவு 10 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்த சசிகலா? காரணம் என்ன?

Lekha Shree

திரையரங்குகளுக்கு விரைவில் அனுமதி: அமைச்சர் தகவல்

Tamil Mint

9,11ம் வகுப்புகளுக்கு இன்று நேரடி வகுப்புகள் தொடக்கம்

Tamil Mint

அண்ணா பல்கலை துணைவேந்தருக்கு அமைச்சர் எச்சரிக்கை

Tamil Mint

அதிமுகவில் வருகிறதா அதிரடி மாற்றங்கள்? ஐவர் குழுவின் பரபர ஆலோசனை

Tamil Mint

பள்ளி மாணவர்களிடையே நடக்கும் சண்டைக்காட்சி…வைரல் ஆகும் காணொளி!

Lekha Shree

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் நாளை மறுநாள் நடை பெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tamil Mint

தமிழக மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் அவர்களுக்கே வழங்குவதுதான் தமிழக அரசியல்: தமிழக பா.ஜ.கவின் துணைத் தலைவர் அண்ணாமலை

Tamil Mint

நீர் நிலையை ஆக்கிரமிப்பவர்களுக்கு எதிராக கோர்ட்டு உத்தரவு

Tamil Mint

அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் எஸ்பிபிக்கு கண்ணீர் அஞ்சலி

Tamil Mint

தீவிரவாதிகளுடன் தொடர்புடையவரின் மனைவி திருச்சியில் கைது

Tamil Mint

எங்கே வந்து விவாதம் நடத்துவது? ராஜேந்திர பாலாஜி சவால்

Tamil Mint