‘மழை விட்டுடுச்சா?’ – இதோ வானிலை மையத்தின் புதிய அறிவிப்பு…!


தமிழகத்தில் மழை சற்றே ஓய்ந்தது என்று நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் மேலும் 4 நாட்களுக்கு மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று கரையை கடந்தது.

இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்தது.

நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. சாலைகளில் வெள்ளம் தேங்கி வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தற்போது மழை குறைந்த நிலையில் வெள்ளம் வடியத் தொடங்கி இருக்கிறது.

Also Read  கருத்து கணிப்புகள் தவிடு பொடியாகும் - அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்!

பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர். இந்த நிலையில் அந்தமானில் நாளை அதாவது சனிக்கிழமை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று அந்த மையம் எச்சரித்துள்ளது.

Also Read  "தூங்கக்கூட முடியல" - PSBB பள்ளி விவகாரம் குறித்து ட்வீட் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்…!

அதன்படி, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

சனிக்கிழமை நீலகிரி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும், மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும்.

நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) டெல்டா மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யும்.

வரும் 15ம் தேதி உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  வருகிறார் சசிகலா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ராமேஸ்வரம் பற்றி 120 தகவல்கள்

Tamil Mint

விஜயகாந்த்-உதயநிதி ஸ்டாலின் திடீர் மீட்…! காரணம் இதுதானா…!

sathya suganthi

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு… முதலமைச்சர் நாளை ஆலோசனை..!

Lekha Shree

தடகள பயிற்சியாளர் மீது வெளிநாட்டில் இருந்தும் குவியும் பாலியல் புகார்….!

sathya suganthi

இழுத்தடிக்கும் இடப் பிரச்சினை…. அத்துமீறியது பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகமா? அடம் பிடிக்கும் இசைஞானியா?

Tamil Mint

நடிகை மீரா மிதுன் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்..!

suma lekha

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள்

Tamil Mint

“யார் உண்ணாவிரதம் இருந்தாலும் கவலை இல்லை” – கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை

Lekha Shree

சென்னையில் இன்று தோனிக்கு பாராட்டு விழா…!

Lekha Shree

40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த பிரபல யூடியூப்பர்…! மறுபிறவி எடுத்துள்ளதாக கண்ணீருடன் வீடியோ…!

Devaraj

மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவரைத் தேர்வு செய்யும் தேர்வுக் குழுக் கூட்டத்தினை புறக்கணிக்கிறேன்: மு.க. ஸ்டாலின்

Tamil Mint

சொத்துக் குவிப்பு வழக்கும்.. பாஜக இணைப்பும்.. பரபரப்பை ஏற்படுத்தும் ராஜேந்திர பாலாஜியின் டெல்லி பயணம்.!

suma lekha