கொரோனா பரவல் எதிரொலி – தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு?


ஒமைக்ரான் வகை கொரோனா மீண்டும் உலக நாடுகளுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் என்ற புதிய வகை தொற்று மிக வேகமாக 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் கடந்த டிசம்பர் 2ம் தேதி ஒமைக்ரான் பாதிப்பு முதன்முதலாக கண்டறியப்பட்டது. ஆனால், அசுர வேகத்தில் பரவ தொடங்கியிருக்கும் ஒமைக்ரான் தொற்றால் இதுவரை இந்தியாவில் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Also Read  செம்ம தில்லுப்பா... கொரோனா போரில் நடிகர்களை ஓரங்கட்டிய பிரபல நடிகைகள்...!

தமிழகத்தில் தினசரி கொரோணா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒருநாள் பாதிப்பு 1000 உயர்ந்து புதிதாக 2,730 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையில் நேற்று முன்தினம் 876 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், அது தற்போது 1,489 ஆக அதிகரித்துள்ளது.

இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் ஒமைக்ரான் வகை தொற்று பரவாமல் தடுக்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்ற ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Also Read  கொரோனா தொற்றால் மேலும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் பலி...! சீமந்தத்தால் நேர்ந்த விபரீதம்...!

கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றுவரும் ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனையில் முடிவில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்டவும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Also Read  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு…!

மேலும், வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு தடை, சுற்றுலா தளங்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்டவைகளும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய கட்டுப்பாடுகள் குறித்து அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழக அரசு திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்திருப்பது விதிமீறல்: மத்திய உள்துறை அமைச்சகம்

Tamil Mint

சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி..!

Lekha Shree

நடிகர் விக்ரம் ரூ. 30 லட்சம் நிதியுதவி…!

Lekha Shree

பள்ளிக்கட்டணம்: உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

Tamil Mint

24 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி…!

Lekha Shree

திமுக பிரமுகர் படுகொலை… மகளே கூலிப்படையை ஏவி தந்தையை கொன்றது அம்பலம்..!

Lekha Shree

திரிஷாவை திட்டி தீர்க்கும் மீரா மிதுன்: என்ன காரணம்?

Tamil Mint

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு? : அமைச்சர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை!

suma lekha

ஆர்வக்கோளாரில் எதையும் பண்ணாதீங்க: விஜய் மக்கள் இயக்கம் எச்சரிக்கை.!

mani maran

செங்கல்பட்டு: அரசு மருத்துவமனையில் மேற்கூரை விழுந்து விபத்து…! அதிர்ஷடவசமாக உயிர்தப்பிய குழந்தை..!

Lekha Shree

வைத்தியம் சொன்ன சாப்பாட்டு ராமனுக்கு கொரோனா வந்த பரிதாபம்…!

sathya suganthi

முடிந்தது புரட்டாசி, குவிந்தது கூட்டம்

Tamil Mint