a

இன்றும் நாளையும் தமிழகம் முழுவதும் 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!


தமிழகத்தில் மேலும் 1 வார காலத்துக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் பொதுமக்களின் நலன் கருதி இன்று இரவு 9 மணி வரையிலும் நாளை ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி இன்று மற்றும் நாளை தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வெளியூர் செல்வதற்கு அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் இன்றும் நாளையும் 4,500சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

Also Read  அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

இதுகுறித்த செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் இரு நாட்களுக்கு 1,500 பேருந்துகள் சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கும் மாநிலத்தில் முக்கிய நகரங்களான கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை மற்றும் முக்கிய நகரங்களுக்கு இடையே 3,000 பேருந்துகளை இயக்கிட போக்குவரத்து துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பயணிகள் கூடுதலாக வரும் பட்சத்தில் தேவையான பேருந்துகள் கூடுதலாக இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Also Read  மதுரை: ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் சரக்கு ஆட்டோவில் கொண்டுசெல்லப்பட்ட கொரோனா நோயாளி!

மேற்கண்ட இரு நாட்களில் பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் இரவு நேரத்தில் சிறப்பு பேருந்துகளும் முழுமையாக இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ஞாயிறு (23.05.2021) அன்று கடைசியாக புறப்படும் பேருந்துகள் பின்வருமாறு இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

கோயம்பேடு மற்றும் தாம்பரம் பேருந்து நிலையங்களுக்கு பயணிகள் செல்ல ஏதுவாக மாநகரப் பேருந்துகள் சென்னையின் முக்கிய இடங்களில் இருந்து இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திமுக தோழமை கட்சிகள் கூட்டம் தொடங்கியது

Tamil Mint

அ.தி.மு.க. எம்.எல்.ஏ., காரில் கட்டுக்கட்டாக பணம் – ரூ.1 கோடியை பறிமுதல் செய்த பறக்கும் படை…!

Devaraj

டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான சிபிசிஐடி வழக்கு: விசாரணை அதிகாரி மாற்றம்!

Lekha Shree

முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்டாலின்

Tamil Mint

தமிழக பள்ளிகளில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தடை

Tamil Mint

வங்கி ஏடிஎம்களில் நூதன கொள்ளை – முக்கிய குற்றவாளிகள் கைது

sathya suganthi

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு:

Tamil Mint

தமிழகம்: கோயில்களில் இனி தமிழில் அர்ச்சனை?

Lekha Shree

தமிழகத்தில் 6000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

Lekha Shree

16 நாட்களில் 51.81% உயர்ந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை…! அச்சத்தில் தமிழக அரசு…!

Devaraj

கொரோனா இரண்டாம் அலை! – தமிழகத்தில் மீண்டும் அதிகரித்துள்ள தினசரி பாதிப்பு எண்ணிக்கை!

Lekha Shree

பிரபல சித்த வைத்திய டாக்டர் சிவராஜ் இன்று காலமானார்!

Tamil Mint