நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்


வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குனர் பாலசந்திரன் இதுகுறித்து கூறுகையில், “வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்புள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெற்று 15ஆம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகரக் கூடும்.

Also Read  திருவண்ணாமலை கோவில் வாசலில் நடந்த திருமணம் - முழு ஊரடங்கால் திணறிய மணமக்கள்…!

கன்னியாகுமரி அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

சேலம், நாமக்கல், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, கோவை, நீலகிரி, திருச்சி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

Also Read  மத்திய குழு சென்னை வந்தது

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இன்றும் நாளையும் கேரள கடற்கரை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Also Read  ஷாருக்கான் அதிரடியால் சையது முஷ்டாக் அலி கோப்பையை கைப்பற்றியது தமிழ்நாடு..!

இதனால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” என கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரஜினியின் உடல்நிலை குறித்து வந்த செய்திகள் யாவும் வதந்திகள்: ரஜினியின் பிஆர்ஒ ரியாஸ்

Tamil Mint

நான் பட்ட கஷ்டத்த அவர் பட வேணாம்: மகனின் அரசியல் வரவை விரும்பாத வைகோ.!

mani maran

தமிழக தேர்தலில் மாஸ் காட்டிய பெண்கள்! முழு விவரம் இதோ!

Lekha Shree

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் சீட்டு வினியோகம் ஆரம்பம்…!

Lekha Shree

கருணாஸ் எம்எல்ஏவுக்கு கொரோனா

Tamil Mint

ஆ.ராஜா மீது தமிழக முதல்வர் கடும் தாக்கு

Tamil Mint

கன்னியாகுமரி-பாம்பன் இடையே கரையை கடக்கும் புயல்: சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

“ உங்கள் நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும்..” ஏ.ஆர் . ரஹ்மானுக்கு ஸ்டாலின் பதில்

Ramya Tamil

தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

Tamil Mint

பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவு – அமைச்சர் ராஜகண்ணப்பன்

Lekha Shree

திமுகவுக்கும் பாஜகவுக்கும் எதில் போட்டி தெரியுமா? கலாய்க்கும் தமிழக அமைச்சர்

Tamil Mint

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தூக்கிட்டு தற்கொலை..!

Lekha Shree