“கனமழை முடிந்துவிட்டது!” – சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்..!


சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கரையை நெருங்கி வருகிறது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 170 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும்போது மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியிலும் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

Also Read  சென்னைக்கான ரெட் அலர்ட் வாபஸ்! - வானிலை ஆய்வு மையம்

விடிய விடிய பெய்த மழை காரணமாக சுரங்கப்பாதைகள் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பல்வேறு சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்தும் மாற்றப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக சென்னையில் பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், மோசமான நிலையை கடந்துவிட்டதாகவும் இனி விட்டு விட்டு மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், “மோசமான நிலை முடிந்துவிட்டது. இனி அவ்வப்போது மழை பெய்யும். மாலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி வட சென்னை-ஸ்ரீஹரிகோட்டா பகுதியை கடக்கும் வரை காற்று வீசும்.

Also Read  சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் பெல்டில் சராசரியாக 150 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. சில நிலையங்களில் 200 மி. மீ., மழை பதிவாகியுள்ளது,

தாம்பரம், சோழவரம், எண்ணூர் ஆகிய பகுதிகளில் 200 மி. மீ., அளவை கடந்து மழை பதிவாகியுள்ளது. அதேபோல் கும்மிடிபூண்டி, ரெட்ஹில்ஸ், மாமல்லபுரம், ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் டிஜிபி அலுவலகம், பெரம்பூர், எம்ஆர்சி நகர் ஆகிய பகுதிகளில் 150 மி மீ., மேல் மழை பதிவாகியுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

Also Read  'ரெட் அலர்ட்' - வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

PSBB பள்ளி இருக்கும் நிலத்தை காமராஜர் வழங்கியது ஏன்? ஏமாற்றி மாற்றியமைக்கப்பட்டதா அந்த பள்ளி?

sathya suganthi

சசிகலாவுடன் சந்திப்பு? – கண்காணிப்பு வளையத்தில் எம்எல்ஏக்கள்…!

Tamil Mint

நாளை விடிய விடிய மகா சிவராத்திரி கொண்டாட்டம் – ஆயத்தமாகும் சிவன் கோயில்கள்

Devaraj

கொரோனா தொடர்பான ஆலோசனைக்கு உதவி எண்கள் – காவல்துறை அறிவிப்பு

sathya suganthi

ஈபிஎஸ் ராஜினாமா – மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து!

Lekha Shree

200+ இடங்களை திமுக பிடிக்காததற்கு காரணம் என்ன?

sathya suganthi

பெண் எஸ்.பியின் பாலியல் புகார்: சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம்..!

Lekha Shree

முதல் தமிழன் – இந்திய பாராலிம்பிக் அணியின் கேப்டனாக மாரியப்பன் தேர்வு!

Lekha Shree

கொரோனா 2ம் அலை! – தமிழகத்தில் 1000-ஐ தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

விஜயகாந்துக்கு கொரோனா அறிகுறி இல்லை: மருத்துவமனை அறிக்கை

Tamil Mint

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் வேலை: தாராளம் காட்டும் செங்கோட்டையன்

Tamil Mint

தமிழகம் தாங்காது : ம.நீ.ம கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிக்கை!!

suma lekha