முதலிரவு குறித்து இரட்டை அர்த்த வசனம்… விஜய் டிவி சீரியலுக்கு வலுக்கும் எதிர்ப்பு..!


கொரோனா தொற்று காலம் தொடங்கியதிலிருந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சின்னத்திரை பக்கம் சென்றதால் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பிக்காக வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை களமிறக்கி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் பல தொடர்கள் புதிதாக ஒளிபரப்பாகி இருக்கிறது. அதில் ஒன்று தான் தமிழும் சரஸ்வதியும் தொடர். இந்த தொடர் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விஜய் டிவியில் ஒளிபரப்பானது.

இந்த தொடரில் தமிழ் கதாபாத்திரத்தில் தீபக்கும், சரஸ்வதி கதாபாத்திரத்தில் நச்சத்திராவும் நடிக்கிறார்கள். இந்த தொடர் தமிழுக்கும்-சரஸ்வதிக்கும் திருமணம் நடக்குமா? என்று பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது.

Also Read  "அடி அடினு அடிச்சாங்க!" - திருநங்கையாக தான் பட்ட வலிகளை கூறும் நமிதா மாரிமுத்து..! கண்கலங்க வைக்கும் ப்ரோமோ..!
Thamizhum Saraswathiyum serial (Star Vijay TV) Cast, Actors, Roles, Real  Names, Wiki & More - Wiki King | Latest Important News

இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலின் ஒரு காட்சி வீடியோ ஒன்று வெளியாகி விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

திருமணமான பெண் ஒருவர் அறையில் நின்று கொண்டிருக்கிறார். அப்போது அந்த அறைக்குள் வயதான பெண்ணொருவர் வந்து டென்சனா இருக்கிறாயா? என்று கேட்கிறார். அதற்கு அந்த பெண் அதெல்லாம் ஒன்னும் இல்ல என்று சொல்கிறார். இன்னைக்கு உனக்கு சாந்தி முகூர்த்தம் அதனால் தான் என்று கேட்டேன் என்று சொல்கிறார். உடனே அந்த பெண் அதனால் என்ன எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல, நான் தைரியமாக தான் இருக்கிறேன் என்று சொல்கிறார். உடனே அந்த வயதான பெண் எங்க காலத்திலெல்லாம் பாட்டில்களை வைத்து எங்களை பயமுறுத்தி விடுவார்கள். தப்பு தப்பா எங்களிடம் சொல்லி கொடுப்பார்கள். நான் உன்னை பயமுறுத்த வரவில்லை, நீ தைரியமாக இருக்கிறாய். ஆனால், விவரமாய் இருக்கிறாயா? விவரம் தெரியாத குழந்தை பாம்பை கையில் பிடித்த மாதிரி அது தைரியமாக இருக்க அர்த்தமாய் என்று அவர் இரட்டை அர்த்தத்தில் பேசுகிறார்.

Also Read  ரசிகர்களுக்காக 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கதிர் வெளியிட்ட உருக்கமான பதிவு…!

இதை கிஷோர் கே ஸ்வாமி ட்வீட்டரில் பதிவிட்டு, ”இதுதான் நாள் முழுக்க எல்லோர் வீடுகளிலும் ஓடிட்டு இருக்கு. அப்புறம் எங்கிருந்து சமுதாயம் உருப்படும்” என்று பதிவிட்டிருக்கிறார்.

இதைப் பார்த்த பலரும் பல விதமாக விமர்சித்து வருகிறார்கள் அதில் அந்த பெண் விண்வெளி வீரர் விண்வெளிப்பயணம் மேற்கொள்ள போகிறார் என்றும் நாட்டில் எவ்வளவோ பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது இதெல்லாம் தேவையா? சீரியல்கள் எல்லாம் கலாச்சாரத்திற்கு கேடு விளைவிக்கிற மாறி வருகிறது என்றும் தாறுமாறாக தமிழும் சரஸ்வதியும் சீரியலை நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகிறார்கள்.

Also Read  'விடுதலை' படத்திற்காக வெற்றிமாறனுடன் முதல்முறையாக இணையும் பிரபல இயக்குனர்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா தொற்று உறுதி…!

Lekha Shree

பீஸ்ட் பட முதல் பாடல் இந்த தினத்தில் தான் வெளியாகிறது.!

suma lekha

‘அண்ணாத்த, வலிமை, பீஸ்ட்!’ – ஹர்பஜனுக்கு வேற லெவலில் வாழ்த்து சொன்ன சுரேஷ் ரெய்னா..!

Lekha Shree

”அஜித் சார் தான் எனக்கு நிஜ வாத்தியார்” – சார்பட்டா வேம்புலி ஓபன்..!

suma lekha

சூர்யாவின் ‘இந்த’ படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் ‘பிரேமம்’ பட இயக்குனர்!

Lekha Shree

பாலிவுட்டிலில் கலக்க தயாராகும் விஜய் சேதுபதி… அதுவும் இந்த தமிழ் படத்தின் ரீமேக்கிலா?

Tamil Mint

முதன்முறையாக விஜய்யுடன் நடித்த சிவகார்த்திகேயன்…

suma lekha

நெட்பிளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட படங்கள் – இந்திய அளவில் முதலிடம் பிடித்த ‘ஷ்யாம் சிங்கா ராய்’…!

Lekha Shree

இந்த வாரம் வெளியேறிய இருவர்… ட்விஸ்டு கொடுத்த பிக்பாஸ்..!

suma lekha

மீண்டும் சுதா கொங்கராவுடன் கைகோர்க்கும் சூர்யா? வெளியான ‘மாஸ்’ அப்டேட்..!

Lekha Shree

19 வயதாகும் பிரபல நடிகைக்கு தற்போது பிறந்த தங்கை… வாழ்த்தும் ரசிகர்கள்!

HariHara Suthan

சட்டசபை தேர்தலில் களமிறங்கும் விஜய் மக்கள் இயக்கம்?

Lekha Shree