a

தடுப்பூசி செலுத்திக்கொண்டு இளம்பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்…!


அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளம்பெண் ஒருவருக்கு ரூ.7 கோடி பரிசாக லாட்டரியில் கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக வாரந்தோறும் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து 1 மில்லியன் அமெரிக்க டாலரை பரிசாக வழங்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

Also Read  பில் கேட்ஸ் மீது விசாரணை நடத்திய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்…!

அதன்படி முதல் வாரத்திற்கான குலுக்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 22 வயது இளம் பெண்ணான Abbigail Bugenskeக்கு அந்த 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை கிடைத்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாய் ஆகும்.

இந்த தகவலை அவருக்கு ஒகையோ மாநில ஆளுநர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார்.

Also Read  அமெரிக்காவின் டெக்சாஸில் கடும் பனிபொழிவு - பேரழிவாக அறிவித்த ஜோ பைடன் !

இதுகுறித்து கூறுகையில், “என்னால் இதை நம்ப முடியவில்லை. சற்றும் எதிர்பாராத ஒன்று அவ்வப்போது செய்திகள் சிலருக்கு அதிர்ஷ்டம் அடித்தது படித்துள்ளேன். இப்போது நானே அந்த அதிர்ஷ்டசாலி என்பதில் மகிழ்ச்சி” என தெரிவித்தார்.

அவர் கடந்த ஆண்டுதான் தனது கல்லூரி படிப்பை நிறைவு செய்துள்ளார். தற்போது மெக்கானிக்கல் பொறியாளர் ஆக விமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

Also Read  கோயிலுக்கு சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த துயரச் சம்பவம் – 27 பேர் உயிரை பலி வாங்கிய பள்ளத்தாக்கு

ஒகையோ மாநிலத்தில் அடுத்து வரும் நான்கு வாரங்களுக்கு இதேபோல் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தடுப்பூசியில் பன்றி புரதம்? விளக்கமளித்த ஆஸ்ட்ராகெனகா!

Devaraj

மெக்சிகோவில் திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய பள்ளம்! – மக்கள் அச்சம்

Shanmugapriya

“எவர் கிவன் கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்க நான் காரணமா?” – அதிர்ந்த பெண் மாலுமி!

Lekha Shree

மரண படுக்கையில் அலெக்சி நவல்னி – புதின் அரசு கொடுத்த விஷம் வேலை செய்கிறதா?

Devaraj

இலங்கை தாதா மரண வழக்கில் பரபரப்பு திருப்பங்கள்

Tamil Mint

15 ஆண்டுகளுக்கு முன்னரே வேலையை விட்டு நின்ற நபருக்கு சம்பளம் அளித்துவந்த நிர்வாகம்! – எவ்வளவு தெரியுமா?

Shanmugapriya

இவர்கள் எல்லாம் மாஸ்க் அணிய தேவையில்லை.. அரசு அதிரடி அறிவிப்பு

Ramya Tamil

உலகம் முழுவதும் அசுர வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா… எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!

Lekha Shree

கோடியில் ஒரு நிகழ்வு – கர்ப்பத்தின் போது மீண்டும் கருவுற்ற பெண்!

Lekha Shree

எலும்பு என நினைத்து AirPod-ஐ சாப்பிட்ட நாய்! – பிறகு என்ன ஆனது தெரியுமா?

Shanmugapriya

பில் கேட்ஸ் மீது விசாரணை நடத்திய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்…!

Lekha Shree

கழிவறைக்கு கதவு இல்லை! – ஆனால், 6.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட வீடு!

Shanmugapriya