a

வீரியம் எடுக்கும் கொரோனா – தெலங்கானாவில் இரவு நேர ஊரடங்கு..!


தெலங்கானா மாநிலத்தில் இன்று முதல் இரவு 9 மணியில் இருந்து காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா 2ம் அலையின் பாதிப்புகள் பல நாடுகளில் உணரப்பட்டு வருகிறது. நிலைமையை கட்டுக்குள் வைக்க பல்வேறு நாடுகளும் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும் வருகின்றன.

ஆனால், நிலைமை கட்டுக்குள் வந்ததாக தெரியவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த மார்ச் மாதம் மீண்டும் வீரியமாக தொடங்கியது.

அதன் விளைவாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு, கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு சதவிகிதம் அதிகமாக உள்ளது. அதனால். மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி போன்ற மாநிலங்களில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து தெலங்கானா மாநிலத்திலும் கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 9 மணி முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மேலும், வெளிமாநிலங்களுக்கு செல்லும் பேருந்து போக்குவரத்துக்கு தடை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இதுவரை 3.61 லட்சமாக உள்ளது. மேலும், 1,856 பேர்கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Also Read  மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு? - ஒரே நாளில் 3 ஆலோசனைக் கூட்டத்தை நடத்தும் பிரதமர்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்றைய தலைப்புச் செய்திகள்

Devaraj

விவசாய சங்கங்களுடன் இரண்டு அல்லது மூன்று நாட்களில் மீண்டும் பேச்சுவார்த்தை. சுமுகத் தீர்வு ஏற்படும் என நம்பிக்கை: ஹரியானா முதலமைச்சர் கட்டார்

Tamil Mint

முதலாளியின் மனைவியை கொலை செய்த காம கொடூரன்!

Lekha Shree

விவசாயிகளின் போராடும் உரிமையில் தலையிட முடியாது: உச்சநீதிமன்றம்

Tamil Mint

தற்கொலைக்கு முயன்றாரா பிக்பாஸ் பிரபலம்?

Tamil Mint

கொலைக்கார கொரோனா – இந்தியாவில் ஒரே நாளில் 3645 பேர் பலி…!

Devaraj

திருப்பதியில் 11-ம் தேதி முதல் இலவச தரிசனம் ரத்து!

Shanmugapriya

மத்திய பட்ஜெட் 2021: 1 காப்பீட்டு நிறுவனம், 2 பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாகிறது!

Tamil Mint

கொரோனா நோயில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 93.05%-ஐ நெருங்கியது

Tamil Mint

நடிப்பில் பட்டையை கிளப்ப வரும் ‘கூல் கேப்டன்’… தோனியின் புதிய அவதாரம் இதோ!

Lekha Shree

இந்தியாவில் மீண்டும் எகிறும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 40,000யை தாண்டியது…!

Devaraj

சாட்சியங்கள் இல்லாத அவமானங்கள் குற்றமாகாது – சுப்ரீம் கோர்ட்

Tamil Mint