a

தெலுங்கானா விபத்து: சிசிடிவி காட்சியால் வெளியான உண்மை!


தெலுங்கானாவில் வனத்துறை சோதனைச் சாவடியில் இருச்சகார வாகனத்தை நிற்காமல் ஓட்டிச் சென்றதால் பின்னால் உட்கார்ந்திருந்த நபர் உயிரிழப்புக்கு வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர் மது அருந்தியதை காரணம் என தெரியவந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஜன்னாரம் மாவட்டம் மஞ்செரியால் நகருக்கு அருகே உள்ள தபால்பூரில் கடந்த 22-ம் தேதி வாகனச் சோதனை நடைபெற்றது.

இது தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சியில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வருவதை முன்கூட்டியே பார்த்த வனக்காவலர் பலமுறை கையசைத்து வாகனத்தை நிறுத்தச் சொல்கிறார்.

அப்படியும் நிற்காமல் வேகமாக வந்த இருசக்கர வாகனம் சோதனைச் சாவடியை நெருங்கியதைப் பார்த்தவுடன், சோதனைச் சாவடி கேட்டை வனக்காவலர் தூக்க முயல்கிறார். அதற்குள் அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகனம் சோதனைச் சாவடி தடுப்பு கேட் மீது மோதிச் சென்றது.

Also Read  "இன்னும் 40 அடி தோண்டினால் புதையல் கிடைக்கும்" - போலீசுக்கு ஷாக் கொடுத்த கும்பல்!

இதில் வாகனத்தை ஓட்டிச் சென்றவர் குனிந்து உயிர் தப்பி விடுகிறார். ஆனால் பின்னால் அமர்ந்திருந்தவர், சோதனைச் சாவடி கேட் மீது பயங்கரமாக மோதி சம்பவ இடத்திலேயே பலியாகிறார். அப்படி உடன் வந்தவர் பலியான பிறகும் வாகனத்தை ஓட்டியவர் நிற்காமல் தப்பி ஓடி விடுகிறார்.

இந்த அதிரவைக்கும் வீடியோ வைரலானது. சோதனைச் சாவடியில் இருந்த வனத்துறையினரே, இளைஞர் பலியானததற்கு புகார் எழுந்ததை அடுத்து தெலங்கானா அரசும் விசாரணைக்கு உத்தரவிட்டது.

Also Read  கேராளா உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3 கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில் இடது சாரிகள் வெற்றி

இதுபற்றி டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ள மஞ்சரியால் உதவி காவல் ஆணையர் அகில் மஹாஜன், அந்த கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வனத்துறை செக்போஸ்ட் இயங்கி வருவதாகக் கூறினார்.

ராட்சத வேகத்தில் வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞர், தனது தலையை மட்டும் தாழ்த்திக் கொண்டு, பின்னால் அமர்ந்திருந்தவருக்கு விபத்தை ஏற்படுததியதாகக் கூறியுள்ளார்.

விபத்தை ஏற்டுத்திவிட்டு தப்பியோடியவரை ஒரு மணி நேரத்திற்கு பின்னர் கைது செய்ததாகவும், அவர் மிகவும் மது அருந்தி போதையில் இருந்ததாகவும் காவல்துறை உயரதிகாரி கூறினார்.

வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞரின் உடலில் 131 MG அளவுக்கு அல்கஹால் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது என்றும் இந்த விபத்து மற்றும் உயிரிழப்பில் வனக் காவலர்கள் மீது எந்த தவறும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Also Read  வேளாண் சட்டங்களால் மண்டிகள் அழியும்: ராகுல்காந்தி காட்டமான பேச்சு!

இதில் வனத்துறைக்கு தவறு இல்லை என்பதை சிசிடிவி வீடியோவைப் பார்க்கும் மக்களே கூறுவது கொரோனா பெருந்தொற்று காலத்திலும் களப்பணியில் இருக்கும் தங்களுக்கு ஊக்கமளிப்பதாக காவல்துறை உயரதிகாரி அகில் மகாஜன் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சபரிமலை பக்தர்களுக்கு போலி கொரோனா சான்றிதழ்

Tamil Mint

பிரச்சாரம் செய்ய 24 மணி நேரத்துக்கு மம்தா பானர்ஜிக்கு தடை!

Shanmugapriya

சேவை கட்டண உயர்வை ஒத்திவைத்த ஜியோ… குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள்!

Tamil Mint

திருப்பதியில் பக்தர்களுக்கு மேலும் தளர்வுகள் அறிவிப்பு

Tamil Mint

ஆக்சிஜன் செறிவூட்டிகளை வீடுகளுக்கு சென்று வழங்கும் பணியை இலவசமாக செய்ய தயார் – ஓலா நிறுவனம்

Lekha Shree

இந்தியாவில் மீண்டும் புதிய பரிணாமத்தில் தடை செய்யப்பட்ட PUBG விளையாட்டு!

Lekha Shree

மத்திய அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்பு… முழு விவரம் இதோ…!

Lekha Shree

எடப்பாடியுடன் மோடி இன்று ஆலோசனை

Tamil Mint

“நோ மீன்ஸ் நோ” – காதலுக்கு உதவி கோரியவருக்கு அஜித் பட பாணியில் போலீஸ் பதில்

Devaraj

மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்பதில் தவறேதும் இல்லை -அமித்ஷா

Tamil Mint

கழிவுநீர் துவாரத்திற்குள் தெரிந்த இரு கண்கள்… அதிர்ந்த தம்பதி!

Lekha Shree

குழந்தைகளை குறிவைக்கும் சிங்கப்பூர் வகை கொரோனா வைரஸ்…?

sathya suganthi