a

பாலியல் புகார்: டென்னிஸ் பயிற்சியாளர் கைது… வெளியான அதிரவைக்கும் உண்மை!


17 வயது டென்னிஸ் வீராங்கனை ஒருவர் கடந்த இரண்டு மாதங்களாக பயிற்சியாளர் தன்னை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்ததாக புகார் அளித்துள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் கடந்த சில தினங்களாகவே தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

பாதிக்கப்பட்ட பெண்கள் இதுகுறித்து புகார் அளிக்கலாம் என பிரத்யேக தொலைபேசி எண்கள் தரப்பட்டன. இதனை அடுத்து பாலியல் புகார்கள் தினந்தோறும் குவிந்து வருகிறது.

மேலும், சென்னையில் தடகளப் பயிற்சியாளர் ஒருவர் மீதும் கராத்தே பயிற்சியாளர் ஒருவர் மீதும் அவர்களிடம் பயிற்சி பெற்ற பெண்கள் புகார் அளித்துள்ளதால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Also Read  3ம் நிலை வீரராக களமிறங்கி 10,000 ரன்களை குவித்து விராட் கோலி சாதனை!

இதில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது மட்டும் 11 புகார்கள் வந்துள்ளன.

இந்நிலையில் டென்னிஸ் பயிற்சியாளர் ஒருவர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக அவரிடம் பயிற்சிக்கு வந்த 17 வயது வீராங்கனை ஒருவர் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த டென்னிஸ் பயிற்சியாளர் கௌரங் நல்வயா என்பவரிடம் 2019ம் ஆண்டு முதல் டென்னிஸ் பயிற்சி பெறத் தொடங்கினார் 17 வயது பெண் ஒருவர்.

பயிற்சிக்கு வருமாறு அழைத்து கடந்த இரண்டு மாதங்களாக பயிற்சியாளர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக அந்த 17 வயது பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read  யூடியூபர் மதனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்…!

சில தினங்களுக்கு முன்னதாக டென்னிஸ் தொடர் ஒன்றுக்காக உதய்பூர் சென்றபோது அங்கும் அந்த பயிற்சியாளர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக அப்பெண் புகார் அளித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து வீடு திரும்பியதில் இருந்து அவர் மிகவும் விரக்தியாக காணப்பட்டதால் அவரின் பெற்றோர் என்ன நடந்தது என விசாரித்தபோது பயிற்சியாளர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறி அதிர வைத்திருக்கிறார்.

Also Read  முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் தலைமறைவு?

உடனே அவரது பெற்றோர் ஜோதி நகர் காவல் நிலையம் சென்ற பயிற்சியாளர் மீது பாலியல் புகார் அளிக்கின்றனர். இதனை அடுத்து ஜெய்ப்பூரின் சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் இருந்த பயிற்சியாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பள்ளி, கல்லூரி மாணவிகள், பயிற்சிக்கு வரும் பெண்கள் தினந்தோறும் அளித்து வரும் பாலியல் புகார்கள் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மார்ச் மாதத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்” – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

Tamil Mint

நாட்டிற்கே மோடி பெயர் வைக்கும் நிலை வரும் – கொதித்த மம்தா!

HariHara Suthan

டவ் தே புயல் இன்றிரவு கரையை கடக்கும்.. இந்திய வானிலை மையம் தகவல்..

Ramya Tamil

மது அருந்துபவர்களை கெட்டவர்கள் என்று கூற முடியாது – ப.சிதம்பரம்

Shanmugapriya

நீட் தேர்வில் இந்திய அளவில் 8 வது இடத்தை பிடித்தார் தமிழக மாணவர் ஸ்ரீஜன்.

Tamil Mint

மேடையிலேயே மயங்கி விழுந்த குஜராத் முதலமைச்சர்

Tamil Mint

ஆபாச வார்த்தைகள்… லட்சக்கணக்கில் பணம்..! மதன் ஓபி-யின் பகீர் பின்னணி!

Lekha Shree

மது அருந்தி திருமணத்திற்கு வந்த மாப்பிள்ளை! – ஆத்திரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண்!

Shanmugapriya

வெளி மாநிலங்களில் இருந்து வருவோருக்கு 7 நாட்கள் கட்டாய வீட்டுத்தனிமை – அதிரடி அறிவிப்பு

Devaraj

“3 வேளாண் சட்டங்களை அனைத்து விவசாயிகளும் புரிந்து கொண்டால் நாடே பற்றி எரியும்” – ராகுல் காந்தி

Tamil Mint

டெல்லி முதல்வர் மகளிடம் பண மோசடி! பிரபல ஆன்லைன் விற்பனை தளம் மூலம் பணம் பறிப்பு!

Tamil Mint

மதுபோதையில் 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்!

Tamil Mint