திரிணாமுல் காங்கிரசில் இணைந்த டென்னிஸ் சாம்பியன் லியாண்டர் பயஸ்..!


பிரபல டென்னிஸ் சாம்பியன் லியாண்டர் பயஸ் மம்தா முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

கோவாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கோவாவிலும் ஆட்சியை கைப்பற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முயன்று வருகிறார்.இதற்காக,மம்தா கோவாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கிடையில், மாநிலத்தின் பல தலைவர்கள் மற்றும் பிற மக்கள் திரிணாமுல் கட்சியில் இணைந்து வருகிறார்கள்.

Also Read  இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை தொடங்கியது! கேரளாவில் தீவிரமாக பரவும் வைரஸ்!

இந்நிலையில்,இந்திய டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்,தற்போது மம்தா முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸில் (டிஎம்சி) இணைந்துள்ளார்.

இது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில்,“லியாண்டர் பயஸ் டிஎம்சியில் இணைந்தார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவர் என் இளைய சகோதரர்.

Also Read  மம்தா பானர்ஜி அனுதாபம் தேடுகிறார்…! – தலிபான்களா தாக்கினார்கள் என பாஜக நக்கல்

நான் இளைஞர் அமைச்சராக இருந்த காலத்திலிருந்தே அவரை அறிவேன்.நாங்கள் வலுவான மாநிலங்களின் ஒன்றியத்தைக் காண விரும்புகிறோம். கூட்டாட்சி அமைப்பு பராமரிக்கப்படுவதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமளியில் ஈடுப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள்… நடவடிக்கை எடுக்க வெங்கையா நாயுடுவிடம் கோரிக்கை..!

suma lekha

சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று திறப்பு

Tamil Mint

பரபரப்பான சாலையை திடீரென கடந்த பாம்பு; சாலையைக் கடக்கும் வரை நின்ற வாகன ஓட்டிகள்! | வீடியோ

Tamil Mint

பெற்ற மகளை 7 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து பல முறை கருவை கலைக்கவைத்த தந்தை! – திடுக்கிடும் சம்பவம்!

Tamil Mint

’என் பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம்’ – சசிகலா வேண்டுகோள்!

suma lekha

இந்தியாவின் தவறான வரைபடம் – ட்விட்டர் நிர்வாகி மீது வழக்கு பதிவு!

Lekha Shree

ஆறுமுக சாமி ஆணையம் பொய் சொல்கிறது: அப்பல்லோ நிர்வாகம் குற்றச்சாட்டு

Lekha Shree

கர்நாடகா: மரபணு மாற்றமடைந்த AY.4.2 வகை கொரோனா வைரஸால் 2 பேர் பாதிப்பு..!

Lekha Shree

கோயில் சொத்து விவரங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும் – அமைச்சர் அதிரடி உத்தரவு

sathya suganthi

ஒரே மேசையில் ஸ்டாலின்…ஓ.பி.எஸ்…! தேநீர் விருந்து சுவாரஸ்யங்கள்…!

sathya suganthi

டெல்லி: இளம்பெண்களை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிய கும்பல்..!

Lekha Shree

“God decides your Destiny!” – தனது கம்பேக் குறித்து அறிவித்த யுவராஜ் சிங்..!

Lekha Shree