பிணவறை ப்ரீசரில் வைக்கப்பட்ட உடல்!!!7 மணி நேரத்திற்கு பிறகு உயிர் இருந்தது கண்டுபிடிப்பு….


உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் இறந்ததாகக் கூறி பிணவறை ப்ரீசரில் வைக்கப்பட்ட நபர் 7 மணி நேரத்துக்கு பிறகு உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீகேஷ் குமார். எலக்ட்ரீஷியனாக பணிப்புரிந்த இவர், கடந்த வியாழக்கிழமை எதிரே வேகமாக வந்த பைக் மோதி படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அங்கு ஸ்ரீகேஷ் குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்து ஸ்ரீகேஷின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனைக்கு வந்து அடையாளம் காட்டும்வரை வரை ஸ்ரீகேஷின் உடல் பிணவறையில் உள்ள ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்டது. சுமார் ஏழு மணி நேரத்திற்கு பிறகு, மருத்துவமனைக்கு வந்து உடலை அடையாளம் கண்ட ஸ்ரீகேஷின் மைத்துனி மதுபாலா மற்றும் குடும்பத்தினர், பிரேதப் பரிசோதனைக்கு சம்மதித்து ஆவணத்தில் கையெழுத்திட்டனர். 

Also Read  கொரோனா 2ம் அலைக்கு 269 மருத்துவர்கள் பலி…! ஐ.எம்.ஏ வெளியிட்ட ரிப்போர்ட்..!

இந்த ஆவணத்தை போலீசார் சமர்ப்பிக்க முற்பட்டபோது, ஸ்ரீகேஷின் உடலில் அசைவு தெரிவதை மதுபாலா கவனித்து மருத்துவரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஸ்ரீகேஷின் உடலை எடுத்து சோதித்து பார்த்தபோது, அவர் உயிருடன் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. தொடர்ந்து, ஸ்ரீகேஷூக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தற்கொலைக்கு முயன்றாரா பிக்பாஸ் பிரபலம்?

Tamil Mint

“தெய்வ குதிரை” இறுதி ஊர்வலத்தில் குவிந்த மக்கள் – கிராமத்துக்கே சீல் வைத்த அதிகாரிகள்

sathya suganthi

சசிகலா கிட்ட இருந்து என்னோட சொத்தை மீட்டு கொடுங்க: கோரிக்கை வைக்கும் கங்கை அமரன்.!

mani maran

பறவை காய்ச்சலுக்கு ரிலையன்ஸ் ஜியோ தான் காரணமா?

Tamil Mint

மகனுக்காக உயிர்காக்கும் மருந்து வாங்க 300 கிமீ சைக்கிளில் சென்ற நபர்!

Shanmugapriya

28 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு வீடு திரும்பிய ஆர்யன் கான்..!

Lekha Shree

28 மனைவிகள்! 135 குழந்தைகள்! 126 பேரக்குழந்தைகள்! 37வது திருமணம் செய்த தாத்தா!

sathya suganthi

வேளாண் சட்ட விவகாரம்: நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார் பிரதமர் மோடி…

Lekha Shree

இந்தியா: உருமாறிய கொரோனாவால் மேலும் 4 பேர் பாதிப்பு!!

Tamil Mint

பால்கனியில் இருந்து தடுமாறி கீழே விழுந்த நபரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய இளைஞர்! – வைரலாகும் சிசிடிவி காட்சி

Shanmugapriya

ஆற்று நீரில் கலந்த கொரோனா வைரஸ்… மக்கள் கலக்கம்!

Lekha Shree

செல்லுக்கு செல் தாவும்…! மூளையை தாக்கும் “டெல்டா”…! அதிர்ச்சி ரிப்போர்ட்…!

sathya suganthi