ரூ.33 லட்சம் 213 சவரன் நகையுடன் சிறுவன் மாயம்!!! பெற்றோர் திட்டியதால் நேபாளம் தப்ப முயற்சி…..


ஆன்லைன் கேம் விளையாடிய மகனை பெற்றோர்கள் கண்டித்ததால் வீட்டில் இருந்து 33 லட்சம் பணம் 213 சவரன் நகையை எடுத்துக்கொண்டு நேபாளத்திற்கு தப்ப முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மொட்டை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வெங்கட் குமார்.  இவர் சென்னை குடிநீர் வாரியத்தில் ஒப்பந்ததாரராக உள்ளார். இவரது மனைவி அரசு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களின் 15 வயதுடைய இரண்டாவது மகன் வீட்டில் எந்நேரமும் ஆன்லைன் விளையாட்டு விளையாடி வந்ததாகவும் அதனால் வீட்டில் உள்ள அனைவரும் சிறுவனை கண்டித்ததாக கூறப்படுகிறது.

Also Read  லிப்ட் கொடுப்பது போல் ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுத்த இருவர் கைது!

 இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் 17ஆம் தேதி இரவு  வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டான்.  வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் வீட்டில் சோதனை மேற்கொண்ட போது பீரோவில் இருந்த முப்பத்தி மூன்று லட்சம் பணம் 213 சவரன் தங்க நகைகளை எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்  இதனையடுத்து போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  மேலும் சைபர் கிரைம் போலீசார்  உதவியுடன் சிறுவனின் செல்போன் நம்பரை வைத்து கண்காணித்ததில் தாம்பரம் பகுதியில் சிறுவன் இருப்பதாக செல்போன் சிக்னல் காட்டியது

Also Read  பெற்ற குழந்தையை விற்ற பணம்!!! மர்மநபர்கள் பறித்துச் சென்றதாகப் புகார்….

ஆனால் அதற்குள் சிறுவன் நகைகளை அடமானம் வைப்பதற்காக  மணி கோல்டு நிறுவனத்திற்கு சென்றபோது  ஊழியர்கள்  சந்தேகப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தாம்பரம் சென்ற போலீசார் சிறுவனையும் நகைகளையும் பத்திரமாக மீட்டு வந்தனர்

விசாரணையில் பெற்றோர்கள் ஆன்லைன்  கேம் விளையாட அனுமதிக்க மறுத்ததால் வீட்டில் இருந்து பணத்தையும் நகையையும் எடுத்துச் சென்றதாகவும் நகையை தாம்பரத்தில் உள்ள ஒரு கடையில் அடகு வைக்க முயற்சித்து பணத்திற்காக காத்திருந்ததாகவும் தெரியவந்தது

Also Read  தனியார் பள்ளி கல்வி கட்டணம்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மேலும் நேபாளம் செல்வதற்காக 44 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து விமானத்தில் டிக்கெட் புக் செய்து இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது . ஆன்லைன் கேம் விளையாடுவதற்கு பெற்றோர்களை கண்டித்ததால் வீட்டிலிருந்த 213 சவரன் நகை மற்றும் முப்பத்தி மூன்று லட்சத்தை மகனே எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எகிறும் உயிர் பலி – தமிழகத்தில் ஒரேநாளில் 467 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

Lekha Shree

மகாசிவராத்திரியை ஒட்டி 4 கால பூஜைகள் நடைபெறவுள்ள 12 சிவாலயங்கள்… முழு விவரம் இதோ..!

Lekha Shree

எலக்ட்ரானிக் வடிவிலான முதல் பட்ஜெட்… தமிழக சட்டசபையில் இன்று தாக்கல்..!

suma lekha

“உளுத்து போயிருக்கின்றன” – இணையத்தில் வைரலாகும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் குறிப்பு…!

sathya suganthi

நடிகர் விவேக்கின் கனவுக்கு கைக்கொடுப்போம்… வாருங்கள்…! தமிழ் மின்ட்டின் புது முயற்சி…!

Devaraj

‘சிங்கார சென்னை 2.0’ – புதிய திட்டத்தை கையில் எடுத்த சென்னை மாநகராட்சி..!

Lekha Shree

ரஜினியை அடுத்து செய்தியாளர்களை சந்திக்கின்றார் கமல்ஹாசன்

Tamil Mint

பாடப்புத்தகத்தில் சாதிப் பெயர்கள் நீக்கம் – பாமக தலைவர் ராமதாஸ் காட்டம்!

Lekha Shree

சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதி…! சிறையில் அடைக்கப்பட்ட ஒரே நாளில் உடல்நலக்குறைவு!

sathya suganthi

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

Tamil Mint

கொரோனா ஊரடங்கு தளர்வு : ரயில்கள் மீண்டும் இயக்கம்

sathya suganthi

திமுக இன்று மாநிலம் முழுக்க போராட்டம், போலீஸ் குவிப்பு

Tamil Mint