a

இந்தியாவில் கொரோனா 2வது அலை உக்கிரம் காட்ட காரணம் என்ன…? விரிவான தகவல்கள்…!


கொரோனா 2வது அலையால் உயிரிழப்போரின் விகிதம் குறைவாகவே உள்ளது என்றாலும், கூடுதல் பரவும் தன்மையுடனும் அபாயகரமானதாக உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இரட்டை உருமாற்றத்தின் மூலம் கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதம் அதிகரிக்கக்கூடும் என்றும், இதன் மூலம் விரைவாக பரவும் தன்மைகொண்டதாக மாறவும், நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது என்றும் கூறும் நிபுணர்கள், இதன்மூலமே கொரோனா பரவல் சீற்றமடைந்துள்ளதாக விளக்கமளித்துள்ளனர்.
கொரோனா வைரசில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் மரபணு மாற்றம் அடைந்த கொரோனாவை மிகவும் தாமதமாக கண்டறிந்ததே இந்தியாவில் கொரோனா சீற்றத்துக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

Also Read  கொரோனாவுக்கு எதிராகப் போராடுவோம் - விராட் கோலி அட்வைஸ்!

கடந்த ஆண்டு ஜூன் 18ஆம் தேதி, இந்தியாவில் பதிவான நோயாளிகள் எண்ணிக்கை 11,000, அடுத்த 60 நாட்களில், இந்த எண்ணிக்கை சராசரியாக 35,000 ஆக உயர்ந்தது.
ஆனால், இரண்டாம் அலை காரணமாக இந்த ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி 11,000 பேர் பாதிக்கப்பட்டதாக பதிவான நிலையில், அடுத்த 50 நாட்களில் இந்த சராசரி 22,000ஆக உயர்ந்தது. அதற்கு அடுத்த 10 நாட்களில் இது விரைவாக உயர்ந்து, சராசரியே 89,800 ஆக மாறி உள்ளது.

இதற்கு கடந்த ஜனவரி மாதம் வாக்கில் கொரோனா குறித்த கவலைகளை மறந்து மக்களும் அரசும் அஜாக்கிரதையாக இருந்ததே இதற்கு காரணம் என்றும் நிபுணர்கள் கூறிகின்றனர். மத ரீதியான பெரிய கூட்டங்கள், பொது இடங்கள் மீண்டும் திறக்கப்பட்டது, கூட்டமான தேர்தல் பிரசாரங்கள் ஆகியவையும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

Also Read  குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா! - கர்நாடகாவில் 30 குழந்தைகள் பாதிப்பு..!

எல்லாம் இயல்புநிலைக்கு திரும்பிவிட்டது போன்ற ஒரு மாயை மக்களிடமும், அதிகாரிகளிடமும் உருவானதால், இரண்டாம் அலையை தடுக்க யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 3.14 லட்சம் பேர். உலகிலேயே ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு இலக்காணவர்களின் அதிக பட்ச எண்ணிக்கை இது.

Also Read  உச்சத்தில் கொரோனா - 3 லட்சத்தை நெருங்கிய தினசரி பாதிப்பு எண்ணிக்கை…!

இந்த நிலையில், மருத்துவமனையில் படுக்கைகள் தட்டுப்பாடு மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி நெஞ்சை ரணமாக்கி வருகின்றன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவால் மரித்து போன மனிதம் – கண்முன்னே தந்தையை பறிகொடுத்த மகளின் கதறல்…!

sathya suganthi

ரூ.2000 நோட்டு அதிகம் புழக்கத்தில் இல்லாததற்கு காரணம்…! மத்திய அரசு சொன்ன தகவல்…!

Devaraj

பிரணாப் முகர்ஜி உடல் இன்று தகனம், பிரதமர் நேரில் அஞ்சலி

Tamil Mint

நீட் தேர்வில் இந்திய அளவில் 8 வது இடத்தை பிடித்தார் தமிழக மாணவர் ஸ்ரீஜன்.

Tamil Mint

கஞ்சாவிற்கு அடிமையாக இருந்த மகனை கொலை செய்த தாய்! – அதிர்ச்சி சம்பவம்

Tamil Mint

வெண்டிலேட்டர் கிடைக்காமல் உயிரிழக்கும் பத்திரிகையாளர்கள்! உ.பி.யில் தொடரும் சோகம்!

Devaraj

வேளாண் சட்டங்களை பிரதமர் திரும்ப பெற வேண்டும்: தமிழக எதிர்க்கட்சிகள்

Tamil Mint

இந்தியாவை அடிமைப்படுத்தியது அமெரிக்காவா…! மீண்டும் உளறி மாட்டிக்கொண்ட உத்தரகாண்ட் முதலமைச்சர்…!

Devaraj

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்படுமா?

Tamil Mint

பாஜக எம்.பி டெல்லி இல்லத்தில் மர்ம மரணம்…!

Lekha Shree

கொரோனாவே இல்லாத இந்திய கிராமம்…! வெளியான ஆச்சரிய தகவல்..!

Lekha Shree

மத்திய அரசின் கையிருப்பிலிருந்து வெங்காயம் சந்தைக்கு வழங்கப்பட்டது

Tamil Mint