கூலி பாக்கி கேட்ட தொழிலாளி கையை வெட்டிய முதலாளி!!!


கூலி பாக்கியை கேட்ட கட்டிடத்தொழிலாளியின் கையை முதலாளி வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்தியபிரதேச மாநிலம் பத்ரி கிராமத்தை சேர்ந்தவர் அசோக் சகெட்.  கட்டிடத்தொழிலாளியினான இவர் கணேஷ் மிஸ்ரா என்பவரிடம் வேலை செய்து வந்துள்ளார். ஆனால்  கட்டிட வேலை செய்ததற்கான கூலித்தொகையை கொடுப்பதில் முதலாளியான கணேஷ் மிஸ்ரா கால தாமதம் செய்துள்ளார். இதனால், முதலாளிக்கும், அசோக் சகெட்டுக்கும் இடையே மோதல் நிலவி வந்துள்ளது.

Also Read  18+ அனைவருக்கும் தடுப்பூசி போட முடியாது…! தட்டுப்பாட்டால் திணறும் மாநிலங்கள்…!

இந்நிலையில், கூலி பாக்கி தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண அசோக் சக தொழிலாளர்களுடன் முதலாளியான கணேஷ் மிஸ்ராவை சந்தித்துள்ளார். அப்போது, கணேஷ் மிஸ்ராவுக்கும் அசோக்கிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கணேஷ் மிஸ்ரா தனது ஆதரவாளர்களுடன் இணைந்து அசோக்கின் கையை வெட்டினார். இதில் அசோக்கின் கை துண்டானது.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த சக தொழிலாளிகள் அசோக் மற்றும் அவரின் வெட்டப்பட்ட கையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்களின் தீவிர சிகிச்சைக்கு பின்னர் அசோக்கின் வெட்டப்பட்ட கை மீண்டும் பொறுத்தப்பட்டது. இது குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேஷ் மிஸ்ரா அவரது சகோதரர்கள் ரத்னேஷ் மிஸ்ரா, கிருஷ்ண குமார் மிஸ்ரா ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Also Read  கொரோனா நோயாளிகளுக்கு மாட்டு தொழுவதில் சிகிச்சை…! மருந்ததாக தரப்படும் கோமியம்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார் – சீமான் ட்வீட்!

Lekha Shree

இன்று முதல் விலை உயரும் பொருட்களின் பட்டியல் இதோ…!

Devaraj

திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு…!

Lekha Shree

500 மூட்டை அரிசியுடன் லாரியை அலேக்காக தூக்கிய பலே திருடர்கள்…

VIGNESH PERUMAL

விவசாயிகள் பயங்கரவாதிகள் அல்ல, நாட்டிற்கு வளத்தை அளிப்பவர்கள்: ராகுல் காந்தி

Tamil Mint

ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி வீட்டுக்கு சீல்…! என்ன காரணம்?

Lekha Shree

கிழிந்த ஜீன்ஸ் பற்றிய கருத்து! – மன்னிப்பு கோரிய முதல்வர்!

Shanmugapriya

தமிழகம் உள்பட பல மாநிலங்களில் 18+ வயதினருக்கு தற்போது தடுப்பூசி இல்லை…!

Devaraj

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி – கே.எல்.ராகுல் விலகல்..!

Lekha Shree

ஜனநாயகத்தை மோடி மற்றும் கிரண்பேடி பின்பற்றுவதில்லை: முதல்வர் நாராயணசாமி

Tamil Mint

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி – வெளியேற்றிய திருச்சபை!

Lekha Shree

செய்தி வெளியிடும் யூடியூப் சேனல்களுக்கு புதிய விதி அறிவிப்பு…!

Lekha Shree